Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து எந்த தப்பும் பண்ணவில்லை என்று குடும்பத்தில் இருப்பவர்கள் யாருமே புரிந்து கொள்ளவில்லை. முக்கியமாக அண்ணாமலை மற்றும் மீனா, முத்து குடித்துவிட்டு தான் காரை ஓட்டி இவ்வளவு ரகளை பண்ணி இருக்கிறார் என்று நம்பி விட்டார்கள்.
ஆனால் என்னை நம்புங்கள் என்று ஒவ்வொருவரிடம் கெஞ்சி பார்த்த முத்துவுக்கு கடைசியில் ஏமாற்றமாக முடிந்து விட்டது. இதைப் பற்றி முத்து நண்பர்களிடம் சொல்லி ரொம்பவே வேதனைப்படுகிறார். பிறகு மீனா வாங்கிக் கொடுத்த காரை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று போலீஸ் ஸ்டேஷனில் வேலைக்காரர் மாதிரி எடுபிடி வேலையை பார்த்து வருகிறார்.
இதற்கிடையில் மீனாவை பார்த்த முத்துவின் நண்பர் இதுவரை முத்து சவாரி ஏற்றும்போது வேலை நேரத்தில் எந்த காரணத்தை கொண்டும் குடித்ததே இல்லை. அதிலும் நேற்று அவர் மீது எந்த தவறும் இல்லை என்று மீனாவிடம் சொல்கிறார். இதனால் குழப்பத்துடனே மீனா வேலைக்கு போகிறார். அப்பொழுது தெரிந்தவர் ஒருவர் குடிப்பழக்கத்தை விடுவதற்கு ஒரு மருந்து இருக்கிறது என்று அதை கொடுக்கிறார்.
வீட்டை விட்டுப் போகப் போகும் முத்து
அதை வாங்கிட்டு வீட்டிற்கு வந்த மீனா ஜூஸில் கலந்து கொடுக்க ரெடி பண்ணினார். இது தெரியாத விஜயா அந்த ஜூசை குடித்துக் கொண்டு வயிற்று வலியில் ஆர்ப்பாட்டம் பண்ணி விட்டார். பிறகு இந்த ஜூஸில் நான் அவருக்காக மருந்து கலந்து வைத்திருந்தேன் என்ற உண்மை மீனா அனைவரது முன்னிலையில் சொல்லிவிடுகிறார்.
இதனை தொடர்ந்து ரவி மட்டும்தான் கொஞ்சம் முத்துவுக்கு ஆறுதலாக பேசுகிறார். அதாவது முத்து இவ்வளவு தூரம் சொல்லும் பொழுது ஏதோ உண்மை இருக்கிறது போல் தோன்றுகிறது என்று மீனாவிடம் சொல்கிறார். அதுவும் அப்பா மேல சத்தியம் பண்ண போனார் என்றால் முத்து மீது எந்த தப்பும் இல்லை என்று தோன்றுகிறது என ரவி சொல்கிறார். உடனே ரவி நடந்து உண்மையை கண்டுபிடிக்கலாம் என்று மீனா மூலம் முயற்சி எடுக்கிறார்.
அந்த வகையில் எம்எல்ஏ வீட்டில் முத்துவின் நண்பரை தொடர்பு கொண்டு அவர் மூலம் எந்த ஒயின்ஷாப்புக்கு போனார் என்ற விவரத்தை ரவி தெரிந்து கொள்கிறார். பிறகு அங்கே போய் அதில் இருக்கும் சிசிடிவி புட்டேஜ் பார்க்கிறார்கள். அப்படி பார்க்கும் பொழுது அங்கே சத்யாவின் நண்பர் லோக்கல் ரவுடி எடுத்த வீடியோ பண்ணுன தில்லாலங்கடி வேலை அனைத்தும் தெரிய வருகிறது.
இதனை பார்த்த மீனா அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்டார். பிறகு ரவி அந்த ஃபுட்டேஜை எடுத்துக்கொண்டு குடும்பத்தில் இருப்பவர்களிடம் போட்டுக் காட்டப் போகிறார். அதே மாதிரி போலீஸ் ஸ்டேஷனிலும் சென்று அந்த வீடியோவை காட்டப் போகிறார். பிறகு எம்எல்ஏ போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி முத்துவின் காரை கொடுக்க சொல்லி வார்னிங் கொடுக்கிறார்.
அதன்படி முத்துவிற்கு காரும் கிடைக்கப் போகிறது இருந்த கெட்ட பேரும் போகப் போகிறது. ஆனால் இதற்குப் பிறகும் நான் இந்த வீட்டில் இருக்க விரும்பவில்லை. என்னை நம்பாதே வீட்டில் நான் யாருக்காக இருக்க வேண்டும் என்று மீனாவை கூட்டிட்டு தனிகுடித்தனம் போவதற்கு முடிவு எடுக்கப் போகிறார்.
இதற்கு தான் ஆசைப்பட்டாய் என்று சொல்வதற்கு ஏற்ப ரோகிணியும் விஜயாவும் சந்தோஷப்பட போகிறார்கள். அடுத்து ரோகிணி எப்படி மாட்டப் போகிறார் என்பதை பற்றி கதை இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.