Actor Dhanush: நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் தான் அதிகமாக இருந்தது.
அந்த வகையில் சூர்யா, ஜோதிகாவின் மகள் தியாவும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். படிப்பில் மிகவும் கெட்டிக்காரரான அவர் 600க்கு 581 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
அதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வில் கூட 500க்கு 487 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் தனுஷின் மகன் யாத்ராவும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்தார்.
படிப்பில் சுட்டியான யாத்ரா
அதன் மதிப்பெண் பட்டியல் பற்றிய விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் கிடையாது. அதனால் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
அதன்படி யாத்ரா பனிரெண்டாம் வகுப்பில் 600க்கு 569 மதிப்பெண்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதில் மொழி பாடத்தில் 98 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 92 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
அதையடுத்து கணக்கில் 99, பிசிக்ஸில் 91, கெமிஸ்ட்ரியில் 92, பயாலஜியில் 97 மதிப்பெண்களும் வாங்கியுள்ளார். இதனால் இப்போது தனுஷ் மற்றும் ரஜினியின் குடும்பத்தினர் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
இப்போது நடிகர்களின் வாரிசுகள் படிப்பு, விளையாட்டு என சாதித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் தியா, யாத்ரா இருவரும் படிப்பிலும் அசத்தி இருப்பது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.