செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

Bhakkiyalakhsmi: கோபி மானத்தை காப்பாற்றிய பாக்யா.. முதல் முறையாக மருமகளுக்காக ஈஸ்வரி எடுக்கப் போகும் முடிவு

Bhakkiyalakhsmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா கொடுக்கும் குடைச்சலால் கோபி குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரிடமும் எப்படி உண்மையை சொல்ல என்று தயக்கத்துடன் இருக்கிறார். ஆனால் ராதிகா சொல்லியே ஆகணும் என்று கூறிவிட்டார். அதனால் கோபி எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இருக்கும் பொழுது உண்மையை சொல்ல வருகிறார்.

இதனை கவனித்த ஈஸ்வரி, கோபியை உண்மை சொல்ல விடாமல் தடுக்க முயற்சி எடுக்கிறார். ஆனால் ராதிகா பக்கத்தில் இருந்து வற்புறுத்ததால் மகன்கள், மகள், மருமகள் அனைவரையும் ஒன்றாக வரவைத்து விட்டார். பிறகு தயக்கத்துடனே கொஞ்சம் கொஞ்சமாக கோபி சொல்ல வரும் பொழுது ஈஸ்வரி ஆட்டையை கலைக்கிற மாதிரி அதெல்லாம் ஒன்னும் இல்ல எல்லாரும் வேலையை பாருங்க என்று சொல்கிறார்.

இதனை எல்லாம் கெத்தாக கால் மேல கால் போட்டு பாக்கியா கவனித்துக் கொண்டு வருகிறார். இங்கே பாக்கியா பண்ற அட்ராசிட்டியை பார்த்து கோபியால் தொடர்ந்து எந்த உண்மையையும் சொல்ல முடியாமல் போய் விட்டது. உடனே பசங்க நீங்க எதுவும் சொல்லவில்லை என்றால் எங்களை விடுங்கள். எங்களுக்கு வேற வேலை இருக்கு என்று சொல்லி கிளம்புகிறார்கள்.

யாரு பேச்சையும் கேட்காத ராதிகா

அப்பொழுது கெத்தாக எழுந்து வந்த பாக்யா அது என்னவென்று நான் சொல்கிறேன் என சொல்லி உங்க அப்பா திரும்பவும் அப்பாவாக போகிறார் என்ற உண்மையை போட்டு உடைத்து விட்டார். இதனால் குடும்பத்தின் முன் கோபி தலைகுனிந்து எதுவும் பேசாமல் நிற்கிறார். ஆனால் பசங்க எதுவும் சொல்லிட கூடாது என்பதற்காக பாக்யா கோபிக்கு சப்போர்ட்டாக பேசுகிறார்.

அது மட்டும் இல்லாமல் ராதிகா கோபி மேல் தவறு எதுவும் இல்லை. இதெல்லாம் பெரிய விஷயமா எடுத்துக்கிட்டு நம்ம நிம்மதியா கெடுத்துக்க வேண்டாம் என்று கோபியை யாரும் தவறாக பேசாத படி பாக்கியா பார்த்துக் கொள்கிறார். பிறகு மறுபடியும் ஈஸ்வரி, கோபி இடம் இந்த குழந்தை வேண்டாம் நீ தான் ராதிகாவிடம் எப்படியாவது சொல்ல வேண்டும் என்று வற்புறுத்துகிறார்.

ஆனால் கோபி பேச்சு எதுவும் ராதிகாவிடம் எடுபடாது. இதனை தொடர்ந்து ஈஸ்வரி மற்றும் பாக்யாவின் மாமனார் கோபி செய்த காரியத்தால் பாக்யா மட்டும் ஏன் தனி மரமாக நிற்க வேண்டும். அவளுக்கு கடைசியில் ஒரு துணை வேண்டும். நம்மளுக்கு ஒரு நல்ல மருமகள் கிடைத்திருக்கிறார். அதனால் நமக்கு எந்த பிரச்சனையும் வராமல் கடைசிவரக் கூடவே இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இப்படியே விட்டால் பாக்யாவின் கடைசி காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதினால் பழனிச்சாமியை கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று பேசிக்கொள்கிறார்கள். உடனே இதற்கு எழிலும் இதுதான் சரியான முடிவு என்று அவருடைய கருத்தை சொல்லி தொடர்ந்து இதற்கான முயற்சியை எடுக்கப் போகிறார்.

பாக்யாவின் வாழ்க்கைக்காக ஈஸ்வரி முதன் முறையாக யோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்கப் போகிறார். ஆனால் கடைசியில் பாக்யா எனக்கு கல்யாணம் எதுவும் வேண்டாம், பழனிச்சாமி ஒரு சிறந்த நண்பர் என்று சொல்லி கதை சுபம் போட போகிறது.

Trending News