செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

Ethirneechal: குணசேகரனுக்கு சரியான பாடம் புகட்டிய ஈஸ்வரி.. ரொமான்ஸில் இறங்கிய கதிரால் ஈ ஆடிய முகம்

தம்பிகளை எப்படியாவது மட்டம் தட்டி பிழைக்க விடக்கூடாது என குணசேகரன் கங்கணம் கட்டி வருகிறார். இந்த வீட்டில் இருந்தே நீங்கள் பிசினஸை செய்து முன்னேறுங்கள் என்று அவர் சொல்லியதில் இருந்தே நடக்கும் எல்லா விஷயங்களையும் மறைமுகமாக கவனிக்கிறார்.

இப்பொழுது ஈஸ்வரி எல்லாத்துக்கும் துணிந்து குணசேகரனை எதிர்க்கும் பலம் வாய்ந்த ஆலமரம் போல் மாறிவிட்டார். அவரிடம் இருந்து தன் குழந்தையை காப்பாற்றிக் கொள்ள ஒரே விஷயம் விவாகரத்து தான் என்று அதற்கு அடி போட்டு பேசுகிறார் ஈஸ்வரி.

ரொமான்ஸில் இறங்கிய கதிரால் ஈ ஆடிய முகம்

ஈஸ்வரி மற்றும் குணசேகரன் இருவருக்கும் 15 வயது வித்தியாசம். இதனால் தனக்கு கல்யாணம் ஆகும்பொழுது சரியான விவரம் இல்லை. நான் படித்தவள், நீங்கள் ஒரு சர்வாதிகாரி என பல குற்றச்சாட்டுகளை குணசேகரன் மீது அடுக்குகிறார் ஈஸ்வரி.

இதைக் கேட்ட குணசேகரன் அதிர்ச்சி கலந்த பயத்தில் இருக்கிறார். அவருக்கு மேல் அவரின் அம்மாவும் பேரதிர்ச்சி ஆகிவிட்டார். படித்த பெண்களை ஆசைப்பட்டு கல்யாணம் செய்து அடக்கி வைத்திருக்கும் குணசேகரனுக்கு இது ஒரு சரியான அடி தான்.

இதற்கு இடையில் அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக கோபப்பட்டு பேசிய கதிரால், நந்தினி கலக்கத்தில் இருக்கிறார். ஆனால் மறுகணமே தாரா பாப்பா அவர்களை சமாதானம் செய்து கட்டிப்பிடித்து, கொஞ்சம்படி செய்துவிட்டார். பயத்தில் இருந்த அனைவரும் நந்தினி ரூம் கதவை தட்டவே ரொமான்ஸை கேள்விப்பட்டு வெட்கப்பட்டனர். இதை மறைமுகமாக கவனித்த குணசேகரன் முகத்தில் ஈ ஆடாத குறைதான்.

Trending News