புதன்கிழமை, ஜனவரி 22, 2025

Vijay : விஜயகாந்த் இடத்தை நிரப்பும் கருப்பு எம்ஜிஆர்.. விஜய்க்கு போட்டியாக கோடிகளை வாரி இறைக்கும் நடிகர்

புரட்சித் தலைவர் எம்ஜிஆர், கேப்டன் விஜயகாந்த் இடத்தை தமிழ் சினிமாவில் யாராலும் நிரப்ப முடியாது. ஆனாலும் அவர்களது வழியில் சில நடிகர்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் இப்போது நல்ல விஷயங்கள் பல செய்து வருகிறார்.

முதற்கட்டமாக பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறார். அது இல்லாமல் கஷ்டப்படும் சிலருக்கும் உதவி செய்கிறார். ஆனாலும் அரசியல் ஆசையில் தான் விஜய் இவ்வாறு செய்கிறார் என்ற ஒரு கருத்தும் வைக்கப்படுகிறது.

அதேபோல் விஜய்யும் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருந்தார். இந்நிலையில் விஜய்க்கு போட்டியாக கோடிகளை வாரி இறைத்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். இப்போது கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கும் இவர் மாற்றம் என்ற அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறார்.

விஜய்க்கு போட்டியாக பல உதவிகள் செய்யும் ராகவா லாரன்ஸ்

ஏற்கனவே மாற்றத்திறனாளி 13 பேருக்கு மூன்று சக்கர வாகனத்தை அன்பளிப்பாக கொடுத்திருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தேவராயபுரம் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைய டிராக்டர் வழங்கினார்.

அப்போது பத்திரிக்கையாளர்கள் மக்கள் உங்களை கருப்பு எம்.ஜி.ஆர் என்று கூறுகிறார்களே அதை பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டிருந்தனர். இப்படி எல்லாம் சொல்லி கோத்து விடாதீர்கள், நான் செய்யும் சேவை மூலம் அனைவருக்கும் இதே போல் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால் போதும் என்று கூறினார்.

இதில் விஜய்க்கு போட்டியாக தான் லாரன்ஸ் இவ்வாறு உதவிகள் செய்து வருகிறாரோ என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது. ஆனால் அவர் பல வருடமாக ஆசிரமம் நடத்தி பல ஏழைக் குழந்தைகளை வாழ வைத்துக் வருகிறார். அதேபோல் விஜய் டிவி பாலா,தான் சம்பாதிக்கும் பணத்தில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து வருகிறார்.

இதே போல் மக்களுக்கு பயனுள்ளதாக சில பிரபலங்கள் யோசித்து செய்யும் ஒவ்வொரு விஷயமும் மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது. லாரன்ஸ் தொடர்ந்து இதை சிறப்பாக செய்து வருவார் என்றும் நம்பப்படுகிறது. இது அரசியலுக்காகவே இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எல்லாமே நல்லது தான்.

Trending News