Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியனின் மூத்த மகன் சரவணனுக்கு கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது. அதுவும் பாண்டியனுக்கு நாம் நினைத்தபடி நம் பையனுக்கு திருமணம் நடக்கப் போகிறது என்று சந்தோசத்தில் இருக்கிறார்.
அதற்காக கோமதி அண்ணன்கள் முன்னாடி ஓவராக பேசி கல்யாணத்தை நாங்கள் ஜாம் ஜாம் என்று நடத்தப் போகிறோம். இந்த ஊரே ஆச்சரியப்படும் அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்று பாண்டியன் தண்டார் அடிக்கிறார். இதை பார்த்து கடுப்பான பாண்டியனின் மச்சான்கள் எதுவும் சொல்ல முடியாமல் வாயை மூடிக்கொண்டு வெளியே போய் விடுகிறார்கள்.
இதனை தொடர்ந்து தங்கமயிலின் குடும்பம் ஏதோ தில்லாலங்கடி வேலை பண்ணுகிறார்கள். அவர்களைப் பார்த்தால் எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்று மீனா அவ்வப்போது கூறி வருகிறார். ஆனால் பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் யாருமே கண்டு கொள்ளாமல் மீனாவை அலட்சியப்படுத்தி வருகிறார்கள்.
மீனாவின் அப்பா செய்த உருப்படியான விஷயம்
தற்போது மீனாவின் அம்மா, பாண்டியன் வீட்டில் நடக்கும் கல்யாணத்திற்கு நாம் போகலாமா என்று ஜனார்த்தனிடம் கேட்கிறார். அதற்கு அவர் எதுவும் சொல்லாமல் கல்யாண பத்திரிக்கையை எடுத்துப் பார்க்கிறார். அப்பொழுது அந்த பத்திரிகையில் பெண் வீட்டார்களை பற்றி போட்டிருப்பதை பார்த்து ஜனார்த்தனனுக்கு சந்தேகம் வந்துவிட்டது.
பிறகு இந்த குடும்பம் எனக்கு தெரிந்த குடும்பம் தான் இவர்கள் கொஞ்சம் மோசமான குடும்பம். மற்றவர்களை ஏமாத்தி வாழ்கிற குடும்பம் ஆச்சே. இங்கேயா பாண்டியன் சம்பந்தம் வைக்கப் போகிறார் என்று சொல்கிறார். உடனே மீனாவின் அம்மா அதிர்ச்சியாகி என்ன என்று கேட்கிறார்.
அதற்கு மீனாவின் அப்பா இவர்கள் என்னிடம் கூட வட்டிக்கு பணத்தை வாங்கி திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார்கள். ஒண்ணுமே இல்லாத ஒரு ஃபிராடு குடும்பம் என்று மீனாவின் அப்பா சொல்கிறார். பிறகு இதைப் பற்றி பாண்டியனிடம் சொல்லலாம் என்று பாண்டியனை நேரில் சந்திப்பதற்கு மீனாவின் அப்பா போகிறார்.
உடனே இவரை பார்த்த சந்தோஷத்தில் பாண்டியன் வாங்க என்று கூப்பிட்டு பேச ஆரம்பிக்கிறார். அப்பொழுது தங்கமயிலின் குடும்பத்தை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஜனார்த்தன் பாண்டியனிடம் சொல்கிறார். நீங்கள் நன்றாக விசாரித்தீர்களா அந்த குடும்பத்தை பற்றி, அவர்கள் அந்த அளவிற்கு பண வசதி இல்லாதவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பது போல் தெரிகிறது என்று கூறுகிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியான பாண்டியன் அடுத்து என்ன பண்ணுவது என்று தெரியாமல் கோமதி இடம் வந்து புலம்புகிறார். ஆனால் கோமதியும் சரவணன் வேற மனசுல ஆசை வச்சுட்டான் என்று புலம்பிய நிலையில் சரவணன் தவிர மற்ற அனைவருக்கும் இந்த உண்மை தெரிய வருகிறது. ஒருவேளை சரவணன் சந்தோஷத்திற்காக தங்கமயிலின் குடும்பத்தை சகித்துக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.