விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே ரசிகர்களிடம் இப்போது அமோக வரவேற்பை பெற்று வரும் தொடர் தான் வீட்டுக்கு வீடு வாசப்படி. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத திருப்பங்களுடன் இந்த தொடர் சென்று கொண்டிருக்கிறது.
அதாவது தன்னுடைய குடும்பத்திற்காக காதலி அஞ்சலியை வேண்டாம் என்று சொல்லிவிட்டு பல்லவியை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் அஜய். ஒட்டுமொத்த குடும்பமே திருமண கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
அர்ஜுன் மற்றும் பார்வதி இருவரும் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்திருக்கின்றனர். மறுபுறம் அஞ்சலிக்கு அஜய்யை விட்டுக் கொடுக்க மனமில்லை. எப்படியும் இந்த திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என்பதற்காக மண்டபத்திற்கு வந்துள்ளார்.
அஜய்யின் திருமணத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் அஞ்சலி
அதுவும் கையில் விஷ பாட்டிலுடன் அஞ்சலி வந்திருப்பதால் விபரீதமாக ஏதாவது நடந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அஜய் மற்றும் பல்லவியின் திருமணம் கண்டிப்பாக நடைபெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் அந்த குடும்பத்தின் மருமகளாக மாறி பல்லவி பல பிரச்சனைகள் செய்ய உள்ளார்.
அதோடு அஞ்சலியும் அஜய்யை பழி வாங்க வேண்டும் என்பதற்காக அவரது தம்பி கண்ணனை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. குடும்பத்திற்காக எதையும் செய்யும் அஜய், காதலை விட்டுக் கொடுக்க மனம் இல்லாத அஞ்சலி, விடாப்படியாக இருக்கும் பல்லவி என வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் விறுவிறுப்பாக செல்கிறது.
மேலும் இந்த வாரம் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் தான் இந்த தொடரில் அடுத்தடுத்து வர இருக்கிறது. எனவே சன் டிவி எதிர்நீச்சல் தொடரின் டிஆர்பிக்கு டஃப் கொடுக்கும் வகையில் மிக விரைவில் வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் முதல் இடத்தை பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.