Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து எதற்கெடுத்தாலும் எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்து பேசுவது கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது. அதிலும் மற்றவங்க விஷயத்திலும் தலையிட்டு அதில் பஞ்சாயத்து பண்ணி கருத்து சொல்வது சகிக்கவில்லை. அதாவது மனோஜ் பிசினஸ் பண்ண முடிவெடுத்து இருக்கிறார்.
அந்த வகையில் முத்துவுக்கு தெரிந்த ஒரு நபர் ஏசி ஷோரும் கடையை விற்பனை செய்யப் போவதாக மனோஜ் ரோகினிக்கு முத்து தெரியப்படுத்தினார். இதனை தொடர்ந்து குடும்பத்துடன் சேர்ந்து அந்த கடையை பார்த்து ஓனரிடமும் பேச்சுவார்த்தை முடித்து விட்டார்கள். அத்துடன் வீட்டிற்கு வந்ததும் இதைப்பற்றி மனோஜ் மற்றும் ரோகினி பேசும்பொழுது முத்து தேவை இல்லாமல் அவருடைய கருத்தை கூறி தொடர்ந்து ரோகிணியை நோஸ்கட் பண்ணி வருகிறார்.
மனோஜ் ரோகிணியை மிரட்டும் முத்து
அது மட்டும் இல்லாமல் கடையை யார் பேரில் ஆரம்பிக்கலாம் என்று பெட்ரூமில் வைத்து ரோகிணி மற்றும் மனோஜ் கலந்த பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை வெளியில் இருந்து ஒட்டு கேட்ட முத்து அப்படியே போனில் ரெக்கார்ட் பண்ணி விடுகிறார். பின்பு பெட்ரூமுக்குள் நுழைந்து மனோஜிடம் நீ அம்மா பெயரை தான் வைக்க வேண்டும் என்று ஆர்டர் போடுகிறார்.
உடனே அது எங்களுடைய இஷ்டம் நீங்கள் தலையிட வேண்டாம் என்று ரோகிணி கூறுகிறார். அப்பொழுது மனோஜ் ரூமில் வைத்து அம்மா பெயரை வைத்தால் கடை ராசி இல்லாமல் போய்விடும் என்று பேசிய வீடியோவை முத்து போட்டு காட்டி பிளாக்மெயில் பண்ணுகிறார். இதனால் வேறு வழி இல்லாமல் ரோகினி நாங்கள் இதைப் பற்றி யோசிக்கிறோம் என்று முத்துவிடம் கூறுகிறார்.
அதற்கும் முத்து கரராக யோசனை எல்லாம் வேண்டாம் அம்மா பெயரை தான் வைக்க வேண்டும் என்று ஆர்டர் போட்டு விடுகிறார். இதற்கு இடையில் நடந்த ஒரு விஷயம் என்னவென்றால் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது கடைக்கு பெயர் வைப்பதே டிஸ்கஷன் பண்ணிட்டு இருக்கோம் என்று ரோகிணி சொல்லி இருந்தார். இதை கேட்டதும் விஜயா முகம் அப்படியே வாடிப் போய்விட்டது.
ஏனென்றால் தன்னுடைய பெயரை வைக்கவில்லை என்ற ஆதங்கம் விஜயாவுக்கு இருந்தது. இதை தெரிந்து கொண்ட முத்து அம்மா பேரை வைத்தால்தான் சந்தோசமாக இருப்பார் என்று தெரிந்து மனோஜை பிளாக்மெயில் பண்ணுகிறார். என்னதான் அம்மா மீது பாசம் இருந்தாலும் அதற்காக மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைப்பது கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது.
இதையெல்லாம் பார்த்த மீனா அம்மா மீது இவ்வளவு பாசம் இருக்கிறது என்றால் உங்களுக்கு ஏதோ ஒரு மனஸ்தாபம் இடையில் நடந்திருக்கிறது என்னவென்று சொல்லுங்கள் என முத்துவிடம் உண்மையை கேட்கிறார். ஆனால் முத்து எதுவும் சொல்லாமல் மீனாவை சமாதானப்படுத்தி அனுப்பி விடுகிறார். இதனை தொடர்ந்து முத்துவுக்கு தெரியாமல் நாம் ஓனரிடம் போய் பேசி பணத்தை செட்டில் பண்ணிவிடலாம் என்று ரோகினி மற்றும் மனோஜ் முடிவெடுத்து இருக்கிறார்கள்.
பிறகு இவர்கள் கடைக்கு போன நிலையில் பணத்தை கொடுக்கும் பொழுது ஓனர் முத்து வந்தால் தான் நன்றாக இருக்கும். நீங்கள் அவருக்கு போன் பண்ணி வர சொல்லுங்கள் என்று ரோகினி மூஞ்சில் கரியை பூசும் அளவிற்கு ஓனர் அவமானப்படுத்தி விடுகிறார். ஆனால் ரோகினிக்கு முத்துவை கண்டால் பிடிக்கவே செய்யாது. எப்பொழுது ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் அவரை காலி பண்ணி விடலாம் என்று கண்கொத்தி பாம்பாக காத்துக் கொண்டிருக்கும் ரோகிணி எப்படி முத்துவை கூப்பிடுவார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.