ரஜினி தற்போது வேட்டையன் படப்பிடிப்பை நிறைவு செய்த நிலையில் அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 6-ம் தேதி தொடங்கும் என்பது முன்பே கூறப்பட்டிருந்தது.
மேலும் ஜெயிலர் படத்தைப் போல ரஜினியின் கூலி படமும் மல்டி ஸ்டார் படமாக உருவாக இருக்கிறது. ஸ்ருதிஹாசன் போன்ற சில பிரபலங்கள் இந்த படத்தில் ஒப்பந்தமாக இருக்கிறார்கள். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தில் எதிர்பார்க்காத வசூலை பெற்றதால் ரஜினி, அனிருத், நெல்சன் போன்றோருக்கு காரை பரிசாக கலாநிதி வழங்கி இருந்தார்.
கூலி படத்தில் ரஜினி, லோகேஷின் சம்பளம்
இதை அடுத்து ரஜினியின் அடுத்த படத்தையும் விட்டுவிடக்கூடாது என்பதால் லோகேஷ் படத்தை லாக் செய்துவிட்டனர் சன் பிக்சர்ஸ். அதோடு இதுவரை ரஜினி மற்றும் லோகேஷ் வாங்காத அளவுக்கு சம்பளத்தை வாரி இறைத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் விஜய் தான் அதிக சம்பளம் பெற்று வந்தார். இப்போது சன் பிக்சர்ஸ் கூலி படத்தில் ரஜினிக்கு 260 கோடி கொடுத்து நம்பர் 1 இடத்தை சூப்பர் ஸ்டார் கொடுத்திருக்கின்றனர். அதேபோல் லோகேஷின் சம்பளமும் இந்த படத்தில் உயர்ந்திருக்கிறது.
அதாவது கிட்டத்தட்ட 60 கோடி சம்பளம் லோகேஷுக்கு சன் பிக்சர்ஸ் நிர்ணயித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் கூலி படத்தில் நடிகர்களின் சம்பளமே ஒரு பெரிய தொகையாக இருக்கிறது. அதோடு படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் தான் உருவாக உள்ளது.