இன்று கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருவது ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து செய்தி. 12 வருடமாக காதலித்து 11 வருட இல்லற வாழ்க்கையை வாழ்ந்த இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என ஊடகங்கள் அலசி ஆராய்ந்து வருகிறது.
அந்த வகையில் சினிமா பிரபலங்கள் மற்றும் சினிமா துறையில் உள்ள விஷயங்களைப் பற்றி ரசிகர்களுக்கு விளக்கும் சினிமா விமர்சகர் பிஸ்மி இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசுகிறார். அதாவது இசையமைப்பாளர், நடிகர் என்பதை காட்டிலும் ஜிவி பிரகாஷை ஒரு நெருங்கிய நண்பனாக தனக்கு தெரியும் என்ற பிஸ்மி கூறி இருக்கிறார்.
ஒரு ரசிகன் எனக்கு பண உதவி வேண்டும் என்று சமூக வலைதளத்தில் கேட்ட நிலையில் ஜிவி பிரகாஷ் அவருக்கு ஜீபே மூலம் பணம் அனுப்பி வைத்தார். அதேபோல் எங்களுக்கும் சில மாணவர்களுக்கு உதவி செய்யும்படி கோரிக்கைகள் வரும். எங்களிடம் போதிய பணம் இல்லாத போது ஜிவி பிரகாஷிடம் சொன்னால் உடனே அனுப்பி வைத்து விடுவார்.
ஜிவி பிரகாஷ் விவாகரத்து பற்றி பேசிய பிஸ்மி
அவர் சினிமாவில் எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் தன்னுடைய தொடக்கமான வெயில் படத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் தான் இப்போதும் தலைகனம் இல்லாமல் இருக்கிறார். அதோடு பிஸ்மியை ஒரு யூடியூப் சேனலில் ஜிவி பிரகாஷின் விவாகரத்து பற்றி பேச சொன்னார்களாம்.
திருமணம் மற்றும் விவாகரத்து என்பது இருவரின் தனிப்பட்ட வாழ்க்கை. அதில் நாம் எந்த கருத்தும் சொல்ல தகுதியானவர்கள் இல்லை. மேலும் விவாகரத்தை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.
ஜிவி பிரகாசுக்கு நடிகை ஒருவருடன் பழக்கம் என்றெல்லாம் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மேலும் ஜிவி பிரகாஷ் எந்த படத்தில் நடிக்கிறார், எந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பதை வேண்டுமானாலும் நான் சொல்ல முடியும். மேலும் அவரின் விவாகரத்து புலனாய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
நானும் ஒரு ஊடகவியாளன் என்ற முறையில் ஊடகங்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால் வாழ்க்கையில் ஒருவருக்கு விவாகரத்து ஏற்படுகிறது என்றால் அது கடினமான சூழல். அதில் மீண்டு வருவதே மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் புலனாய்வு என்ற பெயரில் அவர்களை காயப்படுத்துவது அறமற்ற செயல் என ஒரு தரமான பதிலடியை கொடுத்திருக்கிறார் பிஸ்மி.