Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரனின் குணம் தெரிந்தும் ஏன் இன்னும் அந்த வீட்டில் சூடு சொரணை இல்லாமல் அவர் காலடியிலேயே மருமகள் விழுந்து கிடக்கிறார்கள். இப்படி இங்கு இருந்து கொண்டு என்னத்த சாதிக்க முடியும் என்பது தெரியவில்லை. அட்லீஸ்ட் அதை நோக்கியாவது பயணம் பண்ணுகிறார்களா அதுவும் இல்லை.
வழக்கம் போல் புறணி பேசுவது, சாப்பிடுவது சமைப்பது இந்த மாதிரி சொகுசாக இருந்து கொண்டு இருந்தால் எப்படி இவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். சும்மா எதையாவது பண்றேன் என்பது போல் அவ்வப்போது சொதப்பிக்கிட்டு மறுபடியும் குணசேகரன் முன்னாடி வந்து நிற்பதையே வேலையா வைத்திருக்கிறார்கள்.
வாய்சவடால் மட்டுமே விடும் மருமகள்கள்
இதுல வேற ஜனனி புதுசாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அங்கே சில விஷயங்கள் மர்மமாகவே இருக்கிறது. அதுலயும் அங்கேயும் ஒரு குணசேகரன் போல ஆள் இருக்கிறார் என்று ஜனனி வேற புலம்புகிறார். இனி இந்த குணசேகரனை திருத்துவதற்கு இவருடைய வேலை ஓடிவிடும். இதுல எங்க இருந்து ஜெயிப்பது.
இதை தான் குண்டச்சட்டிலையே குதிரை ஓட்டுவது என்று சொல்வார்கள். போதாதற்கு கரிகாலன் வேற குணசேகரன் வீட்டிற்கு வந்து ஜம்பமாக உரிமை கொண்டாடுகிறார். அந்த வகையில் இவர்கள் கூட்டணி அமைத்து ஒவ்வொருவரையும் காலி பண்ண போகிறார். இதில் முதல் பலிகாடாக ஞானம் மற்றும் ரேணுகா சிக்கிவிட்டார்கள்.
அடுத்ததாக நந்தினி மற்றும் கதிரை குறி வைக்கப் போகிறார்கள். அதனால் நந்தினி அப்பா ஏற்பாடு பண்ணுகிற மொய் விருந்தில் ஏதாவது குளறுபடி பண்ணி எந்த ஆளும் வராதபடி அவமானப்படுத்த போகிறார்கள். அதற்கு துணையாக தான் கரிகாலனை வைத்து நந்தினிக்கு பெரிய ஆப்பை வைக்கப் போகிறார்.
இதிலும் நந்தினி மற்றும் கதிர் தோற்று போய் அவமானப்பட்டு குணசேகரன் முன் நிற்கப் போகிறார்கள். அத்துடன் ஜனனி ஆபிஸில் இருக்கும் குணசேகரன் மாதிரி இருக்கும் ஆளை வைத்து அங்கே அவருக்கு பெரிய குடச்சல் கொடுக்கப் போகிறார். இனம் இனத்தோடு தான் சேரும் என்று சொல்வதற்கு ஏற்ப இந்த இரண்டு குணசேகரன் சேர்ந்து ஜனனியை டார்ச்சர் பண்ண போகிறார்கள்.
ஆக மொத்தத்தில் ஆரம்பித்த இடத்திலேயே குணசேகரன் விட்டு மருமகள்கள் கையில் ஒன்றும் இல்லாமல் நிற்க போகிறார்கள். என்ன இப்ப புதுசா ரெண்டு வருஷத்துக்கு பிறகு கணவன்கள் சப்போர்ட் பண்ணுகிறார்கள். அதை மட்டும் ஒரு சாதனையாக செய்து காட்டியிருக்கிறார்கள். ஒரு நேரத்தில் எப்படி இருந்த நாடகம் இப்பொழுது தட்டு தடுமாறி சீக்கிரமாக முடித்து விடுங்கள் என்று சொல்லும் அளவிற்கு ஆதங்கப்பட்டு வரும் படி கதை அமைந்து வருகிறது.