புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Veetuku Veedu Vasaapadi : கண்ணனின் வாழ்க்கையை நாசமாக்கிய அண்ணி.. பல்லவி கல்யாணத்தில் ஏற்பட்ட ட்விஸ்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் இப்போது கல்யாண எபிசோட் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அஜய்க்கும், பல்லவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மேடைவரையில் வந்து கல்யாணம் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது அஜய் அஞ்சலியை காதலித்து அந்த நிலையில் குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பல்லவியை திருமணம் செய்து கொள்ள ஒற்றுக்கொண்டார். ஆனால் அஜய்யை மறக்க முடியாமல் தவித்த பல்லவி நேரடியாகவே மண்டபத்திற்கு வந்து அஜய் முன்னிலையில் விஷத்தை குடித்து விட்டார்.

ஆனால் மண்டபத்தில் உள்ளவர்களுக்கு அஜய் வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டார் என்ற செய்தி தான் பரவி இருக்கிறது. மேலும் கல்யாணம் நின்னதை நினைத்து பல்லவி அப்பா வேதனை கொள்கிறார். ஆனால் பல்லவியோ அஜய் மற்றும் இந்த குடும்பத்தின் மீது கேஸ் போட போகிறேன் என்று கூறுகிறார்.

பல்லவியை திருமணம் செய்து கொள்ளும் கண்ணன்

அந்த நேரத்தில் வீட்டின் மூத்த மருமகளான பார்வதி இந்த கல்யாணம் கண்டிப்பாக நடக்கும் என்று கூறுகிறார். அதாவது வீட்டின் கடைகுட்டி ஆன கண்ணனை பல்லவிக்கு திருமணம் செய்து வைக்க சம்மதமா என்று பல்லவியின் அப்பாவிடம் கேட்கிறார்.

மணமேடை வரை வந்த பல்லவியின் திருமணம் நடக்கவில்லையே என்ற சோகத்தில் கண்ணனை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதிக்க உள்ளார். இதனால் கண்ணன் மற்றும் பல்லவியின் திருமணம் அதே மேடையில் நடக்க இருக்கிறது.

அப்பாவியான கண்ணனின் வாழ்க்கையில் பல்லவியை திருமணம் செய்து வைத்து நாசமாக்கி விட்டார் பார்வதி. மேலும் இதே கதை ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸில் வந்ததால் ஹை கிளாஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் என வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரை ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Trending News