திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

Mahanadhi: விஜய் காவிரிக்கு எதிராக சதி பண்ண போகும் ராகினி.. தாத்தாவிற்கு அதிர்ச்சியை கொடுக்கும் பேரன்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், தற்போது காவிரியை கண்டுபிடித்த சந்தோசத்தில் விஜய் அவருடன் தனியாக நேரத்தை செலவழிக்க வேண்டும் என்பதற்காக கொடைக்கானலில் இரண்டு நாள் இருந்துட்டு போகலாம் என்று கேட்டிருக்கிறார். அதன்படி காவேரி மற்றும் விஜய் கொடைக்கானலில் சந்தோசமாக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் இவர்களுடைய காதல் மற்றும் ரொமாண்டிக் ரொம்பவே நெருங்கி விட்டதால் இனியும் இவர்கள் பிரிய வாய்ப்பே இல்லை. இவர்களுக்கே தெரியாமல் இருவருடைய மனதிலும் காதல் பூத்து விட்டது. இந்த ஒரு தருணத்திற்காக தான் தாத்தா காத்துக் கொண்டிருந்தார் என்பதற்கு ஏற்ப விஜய் மற்றும் காவேரியின் புரிதல் சந்தோஷத்தை கொடுக்கப் போகிறது.

கிரிமினலாக யோசிக்கும் ராகினி

ஆனால் இந்த சந்தோஷத்தை கெடுக்கும் விதமாக ராகினி அஜய்யை வைத்து பிளான் பண்ணி விட்டார். அதாவது தாத்தா, அஜய் மற்றும் அவருடைய அப்பாவிடம் பசுபதி குடும்பம் நம்மளுக்கு செட்டாகாது. இந்த மாதிரி பெண்ணை கடத்திட்டு போய் பிளாக் மெயில் பண்றது எல்லாம் என்ன ஒரு அயோக்கியத்தனம். அவர் குடும்பத்தில் இருந்து வரும் பெண் நமக்கு தேவையில்லை என்று தாத்தா கூறுகிறார்.

ஆனால் எதையும் காது கொடுத்து கேட்காமல் ராகினி மேல் இருக்கும் ஆசையால் அஜய் பிடிவாதம் பிடிக்கிறார். பிறகு அஜய்யின் அப்பா பசுபதி வீட்டுக்கு சென்று வீட்டில் இருப்பவர்களுக்கு தற்போது இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை. அதனால் யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்.

இதை கேட்டதும் பசுபதி யோசிக்கிறார். ஆனால் ராகினி இதுதான் சான்ஸ் என்று அந்த நேரத்தில் வேற ஒரு பிளானை போட்டு விட்டார். அதாவது எப்படி இருந்தாலும் இந்த காவேரி நம்மளுடைய கல்யாணத்தை நடத்த விட மாட்டார். அதனால் இந்த அஜய் வைத்து அந்த வீட்டிற்குள் போனால் தான் காவேரியை பழிவாங்க முடியும்.

அந்த வகையில் இவரை துருப்புச் சீட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ராகினி இந்த ரகசிய திருமணத்திற்கு சம்மதம் கொடுக்கிறார். தற்போது அஜய்யின் அப்பா அம்மா மற்றும் பசுபதி, ராகினி அவருடைய அம்மா அனைவரும் மட்டும் கோவிலுக்கு சென்று கல்யாணத்தை முடிக்கப் போகிறார்கள்.

கல்யாணம் முடிந்த கையுடன் தாத்தாவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வீட்டிற்கு வருகிறார்கள். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத தாத்தா வேறு வழியில்லாமல் அவர்களை வரவேற்கும்படி சூழ்நிலை அமையப் போகிறது. இதனைத் தொடர்ந்து விஜய் மற்றும் காவிரியை பிரிப்பதற்கும் காவிரிக்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக இனி பசுபதி மற்றும் ராகினி சதித்திட்டம் தீட்டி சூழ்ச்சி பண்ணப் போகிறார்கள்.

ஆனால் இவர்கள் என்ன பண்ணாலும் காவேரியுடன் விஜய் இருக்கும் வரை யாராலும் ஒன்னும் பண்ண முடியாது என்பதற்கு ஏற்ப மொத்த அன்பையும் அவர் காட்டி வருகிறார்.

- Advertisement -

Trending News