Ramarajan: நடிச்ச முதல் படத்திலேயே 425 நாட்கள் ஓடி சாதனை படைத்த கனகா.. பார்த்த ஒரு நொடியில் அதிர்ச்சியான ராமராஜன்

Ramarajan: ராமராஜன் மற்றும் கனகா இருவரும் சேர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்கள். ஆனாலும் இவர்களுடைய கெமிஸ்ட்ரி பார்க்க ரொம்பவே நன்றாக இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு இணைந்து நடித்த படங்களை ஹிட் ஆக கொடுத்து இருக்கிறார்கள்.

அதிர்ச்சியில் உறைந்து போன ராமராஜன்

இன்னும் சொல்லப்போனால் கனகாவின் நேர்த்தியான நடிப்பு பலரையும் கவர்ந்திருக்கிறது. அதிலும் அறிமுகமான கரகாட்டக்காரன் படத்தில் தூள் கிளப்பும் வகையில் நடித்து கிட்டத்தட்ட 425 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்திருக்கிறது. அப்படிப்பட்டவர் 11 ஆண்டுகள் மட்டும் சினிமாவில் பயணத்திருக்கிறார்.

தமிழ் மற்றும் மலையாள படங்களை நடித்தவர். இவருடைய அம்மாவின் இறப்பிற்கு பிறகு சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். இவரைப் பற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்து நிலையில் அதற்கு எந்தவித பதிலும் கூற விருப்பம் இல்லாமல் தன் உண்டு தன் வேலை உண்டு என்று பார்த்து வருகிறார்.

இந்த சூழலில் பல வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் ராமராஜனின் சாமானியன் படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நேரத்தில் ராமராஜனை பார்ப்பதற்காக கனகா சூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிருக்கிறார்.

அப்பொழுது ராமராஜன் இடம் உங்களைப் பார்ப்பதற்கு நடிகை கனகா வந்திருக்கிறார்கள் என்று கூறி இருக்கிறார்கள். உடனே பல வருடங்கள் ஆச்சு பார்த்து என்ற சந்தோஷத்தில் ஓடிப்போய் கனகாவை தேடி இருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு அமர்ந்திருந்த ஒரு பெண்மணி இடம் நடிகை கனகா வந்திருக்கிறார் என்று சொன்னார்கள்.

நான் வருவதற்குள் எங்கே போயிட்டார்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பெண்மணி சிரித்துக்கொண்டே நான் தான் கனகா என்று சொல்லி இருக்கிறார். இதை கேட்டதும் அதிர்ச்சியில் ஒரு நொடி கலங்கி போய் நின்றிருக்கிறார். அதற்கு காரணம் நான் பார்த்த கனாகவா இது என்ற ஆச்சரியம் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் தலையில் முழுவதும் டை அடித்து உடம்பில் வெயிட் போட்டு பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்திருக்கிறார்.

அதனால் அவரைப் பார்த்ததும் எனக்கு ரொம்பவே மனம் நொந்து போகும் வகையில் அதிர்ச்சியாகிவிட்டது என்ற வருத்தத்தில் எதுவும் பேச முடியாமல் நின்றதாக கூறியிருக்கிறார். இதை அவரே சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார். கனகவின் இந்த மாற்றத்திற்கு காரணம் அவருடைய அம்மாவின் இறப்பு மற்றும் தனிமை தான் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் அவர்களை இப்படி பார்க்கும் பொழுது ஒரு கணம் நொறுங்கிப் போய்விட்டேன் என்று வருத்தப்பட்டு இருக்கிறார்.