செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

விஜய் காவிரி ரொமான்ஸ் பண்ற கேப்பில் காரியத்தைச் சார்ந்த ராகினி.. நவீன் மூஞ்சில் கரியை பூசிய முட்டா பீஸ்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், ராகினி காவிரியை பழிவாங்க துருப்புச்சிட்டாக அஜய்யை கல்யாணம் பண்ணனும் என்று முடிவு எடுத்திருந்தார். ஆனால் இதை நடக்கவே விடக்கூடாது என்று காவேரி பிளான் பண்ணி பாதியிலேயே நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விட்டார். இதனால் கோபத்துடன் கொந்தளித்து போய் இருந்த ராகினி யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அஜய்யை கல்யாணம் பண்ணனும் என்று முடிவு எடுத்தார்.

இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட நவீன் எப்படியாவது கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று யோசித்து காவிரி தங்கை யமுனாவிடம் சொன்னார். ஆனால் யமுனா அவருடைய சுயநலத்திற்காக காவிரி வாழ்க்கையை யோசிக்காமல் ராகினி கல்யாணம் பண்ண போகிற விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டார். இதனால் கல்யாணத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாமல் ராகினி நினைத்தபடி அவருடைய காரியத்தை சாதித்து விட்டார்.

தோற்றுப் போய் நிற்கும் நவீன்

அதாவது ராகினிக்கும் அஜய்க்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது. இதை எதிர்பார்க்காத நவீன் கடைசி ஏமாற்றத்துடன் அவர்கள் முன்னாடி அசிங்கப்பட்டு போய்விட்டார். ஆனால் இப்படி நவீன அசிங்கப்பட்டு நிற்பதற்கு முக்கிய காரணம் முட்டாள்தனமாக யோசித்து முடிவு எடுத்த காவேரியின் தங்கை யமுனா தான்.

ஒருவேளை காவேரி மற்றும் விஜய் கொடைக்கானலில் இருந்து அப்பொழுதே கிளம்பி இருந்தார்கள் என்றால் இந்த கல்யாணம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. அவர்கள் அங்கே ரொமான்ஸ் பண்ற கேப்பில் இங்கே ராகினி காரியத்தை சாதித்து விட்டார். இதனைத் தொடர்ந்து ராகினி அஜய், விஜய்யின் தாத்தா வீட்டிற்கு ஜோடியாக வந்து நிற்கிறார்கள்.

இவர்களை பார்த்த அதிர்ச்சியில் விஜய் குடும்பம் ஒன்றும் பேச முடியாமல் நிற்கிறார்கள். ஆனால் காவேரி குடும்பம் வந்து பசுபதியே திட்டுகிறார்கள். இதற்கெல்லாம் அசரக்கூடிய ஆளா பசுபதி. சும்மாவே ஓவராக குதிப்பார், இப்போ ராகினியை நினைத்தபடி கட்டிக் கொடுத்து காவிரி மூஞ்சியில் கரிய பூசி விட்டார்.

இனி சொல்லவா செய்யணும் ஆட்டமும் பேச்சும் ஓவராக தான் இருக்கும். இதை எப்படி காவேரி சமாளிக்க போகிறார் என்பதுதான் இனி ஒவ்வொரு நொடியும் சுவாரசியமாக அமையப் போகிறது.

Trending News