Elan Musk: எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் இந்தோனேசியா பாலி தீவு பகுதியில் ஸ்டார்லிங் சாட்டிலைட் இணைய சேவையை சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். அதை அடுத்து இந்தோனேசியா வந்திருந்த இலங்கை அதிபரையும் அவர் சந்தித்துள்ளார்.
அப்போது அவர்கள் இலங்கையில் இந்த இணைய சேவையை தொடங்குவது குறித்து விவாதித்துள்ளனர். மேலும் மக்கள் பயனடையும் வகையில் தொலைதூரங்களுக்கு இணைப்பை கொண்டு வருவது, கல்வி மேம்பாடு பற்றியும் பேசி இருக்கின்றனர்.
இதை அடுத்து இந்த ஆண்டின் இறுதியில் எலான் மஸ்க் இலங்கை செல்லவும் திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் முன்னதாக கடந்த ஏப்ரல் மாதமே அவர் இந்தியாவுக்கு வருகை தர இருந்தார்.
அப்போது பல பெரும் நிறுவனங்கள் ஸ்டெர்லிங் இணைய சேவை தொடர்பாக கோடிக்கணக்கில் டீல் பேச இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் இந்தியா வரும் திட்டத்தை அவர் கைவிட்டார்.
இந்தியாவை தவிர்த்த எலான் மஸ்க்
சில முக்கிய வேலைகளின் காரணமாக இந்தியாவுக்கு வர முடியவில்லை. ஆனால் இந்த வருட இறுதிக்குள் கண்டிப்பாக எலான் மஸ்க் வருவார் என்று அவர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இப்போது அவர் இலங்கை அதிபருடன் சந்திப்பு நடத்தியது இந்தியாவை வேண்டுமென்றே தவிர்த்தாரா என யோசிக்க வைத்துள்ளது. இதனால் பல கோடி லாபம் பார்க்க இருந்த முதலீட்டார்களும் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
ஆனால் தற்போது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. விரைவில் தேர்தல் முடிந்து அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. இதுதான் எலான் மஸ்க் இந்தியா வராததற்கு முக்கிய காரணமாக பேசப்பட்டு வருகிறது.