சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சுக்கு நூறாக உடைய போகும் பாக்கியவின் குடும்பம்.. கைகட்டி வேடிக்கை பார்க்கும் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் என்று சொல்வதற்கு ஏற்ப தான் கதை நகர்ந்து வருகிறது. பாக்கியாவை கஷ்டப்படுத்த வேண்டும் என்று நினைத்த கோபி, ஈஸ்வரியை தன்னுடன் அழைத்துட்டு போயி ராதிகா வீட்டில் வைத்திருக்கிறார். ஆனால் ராதிகா மற்றும் அவருடைய அம்மாவிற்கும் ஈஸ்வரி வந்தது பிடிக்கவில்லை.

இருந்தாலும் கோபிக்காக கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணலாம் என்று ராதிகா நினைத்தார். ஆனால் ஈஸ்வரி சரியான கேடி மாதிரி கோபியிடம் சென்டிமென்ட் டிராமாவை போட்டு ராதிகாவிற்கும் கோபிக்கும் பிரச்சனை வரும்படி நடந்து கொள்கிறார். இதனால் கடுப்பான ராதிகாவின் அம்மா கமலா, இந்த ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியே அனுப்பினால் தான் ராதிகா சந்தோசமாக இருப்பார் என்று நினைக்கிறார்.

பாக்கியாவிற்கு ஏற்படப்போகும் விபரீதம்

அதற்கு ஏற்ற மாதிரி ஈஸ்வரி என்ன பண்ணாலும் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கமலாவும் களத்தில் இறங்கி வச்சி செய்கிறார். இதனால் ஒவ்வொரு நிமிடமும் அங்கே போர்க்களமாக தான் ஆகிறது. இதை சமாளிக்க முடியாமல் கோபி மண்டையை பிச்சுகிற அளவுக்கு டென்ஷன் படுகிறார். ஒரு பக்கம் ராதிகா இன்னொரு பக்கம் அம்மா என்று இரண்டு மத்தளத்துக்கு நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பாக்யா வீட்டில் ஜெனி, அமிர்தா மீது பொறாமை பட்டு வருகிறார். எல்லோரும் அமிர்தாவை தான் கொண்டாடுகிறார்கள். நம்மளை யாருமே கண்டுக்கவில்லை என்ற நினைப்பு வந்து விட்டது. அதனால் அடிக்கடி நான் ஏதாவது வேலை பண்ணவா என்று கேட்டுக் கொண்டே வருகிறார். ஆனால் பாக்கியா ஜெனியை அலட்சியப்படுத்தும் விதமாக நீ போய் குழந்தையை பார்த்துக்கொள் என்று சொல்லி விடுகிறார்.

இதனால் அப்சட்டில் இருக்கும் ஜெனி கொஞ்சம் கொஞ்சமாக அமிர்தா பாக்கியா மீது கோபப்பட ஆரம்பிக்கிறார். இதன் விளைவாக செழியன் ஒரு முடிவு எடுக்கப் போகிறார். அதாவது ஆரம்பத்தில் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் செழியன் ஒரு பிளாட் வாங்கி இருந்தார். அந்த வகையில் தனியாக போய்விடலாம் என்று ஜெனியை கூப்பிட்டு பாக்கியவை விட்டு கிளம்ப வாய்ப்பு இருக்கிறது.

இதற்கு தான் ஆசைப்பட்டேன் என்று சொல்வதற்கு ஏற்ப கோபி இந்த விஷயத்தை நினைத்து சந்தோஷப்பட போகிறார். ஏனென்றால் பாக்யாவிற்கு எந்த கஷ்டம் கொடுத்தாலும், கூட இருக்கும் குடும்பத்தினால் ஜெயித்துக் கொண்டே வருகிறார். இதனால் அந்த குடும்பத்தில் இருந்து பாக்யாவை தன்னந்தனியாக பிரித்து விட்டால் பாக்கியா நிலை குலைந்து போய்விடுவார். ஆத்துடன் வாழ்க்கையிலும் தோற்றுப் போய் நிற்பார் என்று கோபி நினைக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி தான் இனி ஒவ்வொரு காட்சிகளும் வரப் போகிறது.

Trending News