Fatherless America: விஞ்ஞானம் வளர வளர ஒவ்வொரு காலகட்டமும் பல மாறுதல்களை பார்த்து வருகிறது. அந்த வகையில் இப்பொழுது புது புது டெக்னாலஜி வளர்ந்து கொண்டே வருகிறது. இந்த ஒரு விஷயம் பல நல்லதுகளை கொடுத்தாலும் குடும்பங்களில் ஏகப்பட்ட சிக்கல்களை ஏற்படுத்துகிறது. காரணம் டெக்னாலஜி பயன்பாடுகளால் ஒவ்வொருவருடைய பாக்கெட்டும் பணத்தால் நிரம்புகிறது.
அப்படி கையில் பணம் குவியும் பொழுது அவர்களுடைய குடும்பங்களின் கட்டமைப்பும் தடுமாறுகிறது. நான் யாரை நம்பியும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய இஷ்டத்துக்கு நான் இருப்பேன் என்று பலரும் சுற்றித் திரிய ஆரம்பித்து விட்டார்கள். இதனால் கலாச்சாரம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வருகிறது.
குடும்பத்தைப் பிரிந்து போகும் ஆண்கள்
இதற்கு ஒரு உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் கல்யாண வாழ்க்கையை எடுத்துக் கொள்ளலாம். முன் காலத்தில் பிடிக்குதோ பிடிக்கலையோ அட்ஜஸ்ட் பண்ணி குழந்தைகளுக்காக சகித்துக் கொள்ளலாம் என்று இருந்தார்கள். ஆனால் தற்போது கொஞ்சம் மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலே உடனே விவாகரத்தை நோக்கி போய்விடுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டு தன்னந்தனியாக இருப்பது குழந்தைகள் தான்.
இந்த ஒரு விஷயம் தற்போது பெருகிக்கொண்டே வருகிறது. அதிலும் அமெரிக்காவில் 40% ஆண்கள் கல்யாணம் ஆகி குழந்தை இருந்தாலும் கொஞ்ச நாட்களிலேயே அவர்களுக்கு பிடித்தமான வேறு ஒரு வாழ்க்கையை தேடி போய் விடுகிறார்கள். இதனால் கணவர்கள் உதவி இல்லாமல் கிட்டத்தட்ட 60% பெண்கள் குழந்தையை தனியாக பார்த்து கொள்கிறார்கள்.
ஆனால் ஒரு குடும்பம் என்றால் அப்பா அம்மா அரவணைப்புடன் கண்டிப்பு பாசம் எல்லாம் சேர்ந்து கிடக்கும் போது தான் அந்த குழந்தைகள் முழுமையாக நல்வழியில் போவதற்கு வாய்ப்பு இருக்கும். இந்த ஒரு விஷயம் அமெரிக்காவில் அதிகமாக இருப்பதால் முக்கால்வாசி குழந்தைகள் தப்பு தண்டா பண்ணி ஒரு லட்சத்திற்கு 600 பேர் குற்றங்கள் செய்து தண்டனை அனுபவித்து வருவதாக ஆய்வுகள் கண்டறியப்பட்டிருக்கிறது.
இதனால் அமெரிக்காவில் பல குடும்பங்கள் சீரழிந்து சின்னாபின்னமாக சிதறுகிறது. இதே மாதிரி சைனாவில் ஒரு லட்சம் பேருக்கு 400 சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இது இப்படியே நீடித்துப் போனால் உலகம் முழுவதும் இந்த ஒரு விஷயம் பெரிய பூதாகரமாக வெடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது பொருத்தது போதும் என்று மனைவிகளும் குழந்தைகளை விட்டு பிரிய இருந்தால் அந்த குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.
அத்துடன் அந்த குழந்தைகள் தட்டு தடுமாறி போவதால் எது நல்லது கெட்டது என்று தெரியாமல் திசை மாறிவிடுவார்கள். இதனால் உலக அளவில் ஒரு பேராபத்து ஏற்பட கூட வாய்ப்பிருக்கிறது. என்னதான் குழந்தைகள் ஒற்றை பெற்றோர் கவனிப்பில் வளர்ந்து வந்தாலும் அப்பா அம்மா இருவரும் சேர்ந்து பார்த்து வரும் குழந்தைகளின் மனநிலை என்றைக்குமே நல்வழியை ஏற்படுத்தும்.