திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

குணசேகரன் நடத்திய அரங்கேற்றத்தில் சிக்கிய மட சாம்பிராணி.. பிச்சை எடுத்து கோடீஸ்வரராக போகும் மருமகள்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரனை எதிர்த்து ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று போராடிய மருமகளை அடக்கும் விதமாக குணசேகரன் புது யுத்தியை ஃபாலோ பண்ணினார். எது பண்ணினாலும் இந்த வீட்டில் இருந்து ஜெயித்து விட்டு அதன் பின்னே நீங்கள் போங்கள் என்று உசுப்பேத்தி இருக்கிறார்.

இவர் உசுப்பேத்தினதும் அதில் பலிகாடாகிய சிக்கிய மருமகள்கள் நாங்கள் இந்த வீட்டிலேயே இருந்து ஜெயித்து காட்டுகிறோம் என்று சவால் விட்டார்கள். ஆனால் விட்ட சவாலில் ஒவ்வொருவரும் தோற்கும் படி ஞானம் மற்றும் ரேணுகா அவமானப்பட்டு நின்று விட்டார்கள். இதற்கு ஒரு வகையில் குணசேகரன் தான் மறைமுகமாக கரிகாலனை வைத்து காய் நகர்த்தி இருக்கிறார்.

குணசேகரன் தொடர்ந்து கொடுக்கும் டார்ச்சர்

அதோடு மட்டுமில்லாமல் நந்தினி மொய் விருந்து வைத்து அதன் மூலம் புது பிசினஸ்க்கு அஸ்திவாரத்தை போடலாம் என்று நினைத்தார். அதையும் வேரோடு சாய்க்கும் விதமாக அதிலும் தில்லாலங்கடி வேலையை பார்த்து நந்தினி மற்றும் கதிரை அசிங்கப்படுத்தினார். உடனே ஜனனி, ரேணுகா, ஈஸ்வரி, ஞானம் அனைவரும் சேர்ந்து கழுத்துல போட்டு இருந்தது கையில வச்சிருந்தது எல்லாத்தையும் மொய்ப்பணமாக தானம் பண்ணி விட்டார்கள்.

இவர்களையும் தாண்டி ஞானம் கடன் வாங்கி பணத்தை கொடுத்து கெத்து காட்டியிருக்கிறார். இதை பார்த்த குணசேகரன், ஞானம் யாரிடம் கடன் வாங்கி இருக்கிறார் என்று தெரிந்து அந்த நபரை வைத்து மறுபடியும் பிரச்சினையை ஆரம்பித்து விட்டார். இவர் சொன்னபடி ஞானத்தின் நண்பர் வீட்டுக்கு வந்து கடன் கேட்டு அசிங்கப்படுத்துகிறார்.

இதற்கிடையில் நந்தினிக்கு சேர்ந்த மொத்த பணத்தையும் அவருடைய வங்கிக் கணக்கில் சேர்த்து புது பிசினஸ் பண்ணுவதற்கு லேட்டஸ்ட் போன் வேணும் என்பதால் அதையும் வாங்கிவிட்டு வந்துவிட்டார். இதனால் ஞானம் பெற்ற கடனை எப்படி திருப்பி அடைக்கப் போகிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து நந்தினி பண்ண போகும் பிசினஸில் குளறுபடி பண்ணும் விதமாக குணசேகரன் ஆடுபுலி ஆட்டம் ஆட போகிறார். இதையெல்லாம் தாண்டி இவர்கள் என்னைக்கு ஜெயித்து குணசேகரனை தோற்கடிக்க போகிறார்கள். நியாயமாக இருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் நடக்குமா என்பதற்கேற்ப அந்த வீட்டில் இருக்கும் மருமகளுக்கு தொடர்ந்து பிரச்சனையாக வந்து கொண்டே இருக்கிறது.

எது எப்படியோ பிச்சை எடுத்தாவது கோடிஸ்வரராக ஆகிவிடலாம் என்று நந்தினி பிளான் பண்ணியதில் கொஞ்சம் வெற்றி பெற்று விட்டார். இப்படி அவமானப்பட்டு அசிங்கப்பட்டு மொய்ப்பணத்தை வாங்கிய நந்தினி, அன்னைக்கு வீட்டில் நாலு சுவற்றுக்குள் தாரா படிப்புக்காக ஞானம் பணத்தை கொடுத்த பொழுது கௌரவத்தை பார்த்து வீர வசனமாக பேசி சண்டையை ஏற்படுத்தினார்.

இப்பொழுது எங்கே போச்சு அந்த கௌரவம் மானம் மரியாதை எல்லாம். இப்ப மட்டும் ஞானம் பணம் கொடுத்து நகை கொடுத்தால் அதை சந்தோசமாக வாங்கிக் கொண்ட நந்தினி அப்பொழுது என்ன சுயநினைவு இல்லாமல் இருந்தாரோ என்னமோ? அத்துடன் ஜனனிக்கு வேலை கிடைத்ததும் சக்தி எனக்கும் வேலை கிடைச்சிருச்சு நானும் நாளையிலிருந்து வேலைக்கு போகிறேன் என்று சொன்னார். ஆனால் இப்பொழுது வரை எடுபிடி வேலை மட்டும் பார்த்துக் கொண்டே வருகிறார்.

சர்வாதிகாரம் பண்ணும் குணசேகரன்

Trending News