Former President Trump: அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2017 முதல் 2021 வரையில் அமெரிக்க நாட்டு அதிபராக இருந்தவர். அந்த நாட்டின் 45 வது அதிபராக பொறுப்பேற்றவர். இதனை அடுத்து தற்போது குடியரசு கட்சி சார்பில் மீண்டும் அதிபராக வேண்டும் என்பதால் வேட்பாளராக களத்தில் இறங்கி இருக்கிறார். இந்த நிலையில் இவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எதற்காக என்றால் இவருடன் இருந்த நடிகை பாலியல் தொடர்பை மறைப்பதற்காக ஆபாச நடிகை ஸ்டோமி டேனியல்ஸுக்கு சுமார் 1.3 லட்சம் டாலர்களை 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சார சமயத்தில் நிதியிலிருந்து கொடுத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது நம்ம கணக்குப்படி சுமார் 1 கோடி 66 லட்ச ரூபாயை கொடுத்திருக்கிறார்.
ட்ரம்ப் கூறிய கருத்து
அத்துடன் இந்த குற்றத்தை மறைக்கும் விதமாக போலி ஆவணங்களை சமர்ப்பணம் செய்திருக்கிறார். அந்த வகையில் 11 இன்வாய்ஸ் 11 காசோலை மற்றும் 12 வவுச்சர் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக ரெடி பண்ணி ட்ரம்ப் தரப்பிலிருந்து 34 போலி ஆவணங்களை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறார்.
இதை கண்டறிந்த நிலையில் அவர் குற்றவாளி என்றும் தீர்மானித்திருக்கிறார்கள். அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒருவர் முறை கேட்டு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது இதுவே முதல்முறையாக இருக்கிறது. இதனால் வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்க இருக்க அதிபர் தேர்தல் பல மாற்றங்களை ஏற்படுத்த போகிறது.
அதாவது இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபராக இருக்கும் ஜோ பைடனும் களமிறங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த வழக்கு விவாகரம் கண்டிப்பாக ட்ரம்புக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தப் போகிறது. ஆனாலும் இந்த ஒரு விஷயத்தால் ட்ரம்ப் தேர்தலில் போட்டியிட தடை ஏதும் இருக்காது என தகவலும் வந்து கொண்டிருக்கிறது.
ஏனென்றால் இந்த விவாகரத்துக்கு ட்ரம்ப் கூறிய கருத்து என்னவென்றால், எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் என்னை பழிவாங்கும் வகையில் எனக்கு அவமானத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த பொய்யான வழக்குகளை ஜோடிக்கப்பட்டதாக அவர் ஆக்ரோஷமாக தெரிவித்திருக்கிறார்.
இவர் கூறிய கருத்துக்கு தற்போதைய அதிபர் பைடன் பதில் கூறியது என்னவென்றால் சட்டத்திற்கு முன்னாடி யாரும் தப்பிக்க முடியாது. அதனால் ட்ரம்ப் மீது வைக்கப்பட்ட வழக்கு குறித்து கண்டிப்பாக நீதி கிடைக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தற்போது ட்ரம்புக்கு எதிராக 36 வழக்குகள் பதிவிடப்பட்டிருக்கிறது. ஆனாலும் இவர் தேர்தலில் போட்டியிட எந்தவித எதிர்ப்பும் இப்பொழுது வரை வரவில்லை.