Arun Vijay’s Networth: 1995 முறை மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார் அருண் விஜய்..நியூமராலஜி படி அருண் குமார் ஆக இருந்த தன்னுடைய பெயரை அருண் விஜய்யாக மாற்றிக்கொண்டார். சினிமா குடும்பப் பின்னணி என்பதால் சிறுவயதிலிருந்தே நன்றாக நடனம் ஆடுவார்.
நடிகர் விக்ரமைப் போல் படத்துக்காக தன்னை அர்ப்பணித்தவர்களுள் இவரும் ஒருவர். பாடி பில்டிங், டெடிகேஷன், என உடலை வருத்தி நடிப்பதில் விக்ரமுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் அருண் விஜய் தான். படத்துக்கு படம் வித்தியாசம் காட்டக்கூடியவர்.
பிரியம், கங்கா கௌரி, துள்ளித் திரிந்த காலம் என ஓரளவு நல்ல விமர்சனம் ஏற்படுத்திய படங்களை கொடுத்த போதிலும் இவருக்கு நல்ல நடிகர் என்று அங்கீகாரம் கிடைக்கவில்லை. மலை மலை, மாஞ்சா வேலு என இரண்டாவது இன்னிங்ஸிலும் இவர் நடித்த படங்கள் கை கொடுக்கவில்லை.
அஜித்தை விட பேராசை பிடித்த விக்டர்
பாண்டவர் பூமி, இயற்கை என இவர் நடித்த இரண்டு படங்கள் ஓரளவு ஓடினாலும், தடையற தாக்க, என்னை அறிந்தால், குற்றம் 23, தடம் போன்ற படங்கள் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. குறிப்பாக அஜித்துக்கு வில்லனாக என்னை அறிந்தால் படம் இவரை இரண்டாவது இன்னிங்ஸில் தூக்கி விட்டது.
கிரிக்கெட்டில் எப்படி தினேஷ் கார்த்திக்கோ அதை போல் சினிமா துறையில் அருண் விஜய் தான். நிறைய தோல்விகளை சந்தித்து அதன் மூலம் சரியான பாடங்களை கற்று வெற்றி பெற்றவர். அருண் விஜய். அஜித்தை போல இவரும் பைக் மற்றும் கார்களில் அதிக பேராசை கொண்டவர். வீட்டிலேயே பைக் கேரேஜ் ஒன்று வைத்திருக்கிறார்.
30 வருட சினிமா கேரியரில் இவர் சம்பாதித்த சொத்துக்கள் 80 கோடிகள். அஜித்தை போல இவரும் ஒரு பைக் பிரியர்.. இவரிடம் 25 லட்சம் மதிப்பில் சுசுகி ஹையபுசா பைக்கும், ராயல் என்ஃபீல்டு பைக்குகளும்,யமஹா ரே பைக்குகளும் இருக்கிறது. அதுபோக போர்சே, பிஎம்டபிள்யூ ,டொயோட்டா ஃபார்ச்சூனர் அவர்களையும் சொந்தமாக்கி இருக்கிறார்