Superstar’s Blessing: லாரன்ஸ் இயக்குவதையே ஒத்தி வைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் நடிகர்களுள் இவரும் ஒருவர், எஸ் ஜே சூர்யா, விஜய் சேதுபதி லாரன்ஸ் போன்றவர்கள், எந்த கதாபாத்திரத்திலும் நடிப்பதால் எப்பொழுதுமே பிசி தான்.
சந்திரமுகி 2, ருத்ரன் ஆகிய இரண்டு படங்களுக்குமே ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து ஃபெயிலியராக அமைந்தது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மரண ஹிட் அடித்தது இப்பொழுது அதிகாரம், துர்கா என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
வாழ்த்தி திலகமிட்டு அனுப்பிய சூப்பர் ஸ்டார்
சமீபத்தில் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 படம் வெளியாகி சக்க போடு போட்டது. இந்தப் படம் 50 கோடிக்கு மேல் வசூலை பெற்று தந்தது. இந்த படத்தின் வெற்றி ராகவா லாரன்ஸின் ஆசையை தூண்டி உள்ளது. அவரிடமும் கையில் அட்சய பாத்திரம் போல் காஞ்சனா படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் இருக்கிறது.
இப்பொழுது ரஜினியின் கூலி படத்தில் நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் அந்த அட்சய பாத்திரத்தை மீண்டும் கையில் எடுக்கிறார். செப்டம்பர் முதல் வாரத்தில் காஞ்சனா 4, முனியின் ஐந்தாம் பாகம் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார்.
இதனை கூலி படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில்கேட்டு அறிந்த ரஜினி காந்த் வாழ்த்துக்களையும், திலகத்தையும் இட்டு அனுப்பி உள்ளார். ஏற்கனவே காஞ்சனா மூன்று பாகங்களும் நல்ல ஒரு வசூலை பெற்று தந்தது. காஞ்சனா படம் என்று சொன்னாலே வியாபாரத்திற்காக போட்டி போட்டு வருவார்கள். இப்பொழுது காஞ்சனா நான்காம் பாகத்தை ஆரம்பித்து விட்டார் என்றால் லாரன்ஸ் காட்டில் பணமழை தான்.
- சூப்பர் ஸ்டார் படத்தை மிஸ் செய்து புலம்பும் 3 ஹீரோயின்கள்
- சூப்பர் ஸ்டார் கட்டி காப்பாற்றியும் மதிக்காத அந்த நபர்
- வேட்டையன் படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர்