செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

எக்ஸ் தளத்தின் சிஇஓ எலன் மாஸ்கை மிரள விட்ட தமிழன்.. Tesla-க்கு அச்சாணியே நீ தான் என புகழாரம்

Elon Musk: அமெரிக்காவை சேர்ந்த ஒரு மோட்டர் நிறுவனம் மின்சாரத்தினால் இயங்கும் வண்டிகளை மட்டுமே உருவாக்கி டெஸ்லா மோட்டார்ஸ் என பெயரிடப்பட்டது. 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் டெஸ்லா ரோஸ்டர், மாடல் எஸ், மாடல் எக்ஸ், மாடல் 3 ஆகிய கார்களை தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் எக்ஸ் தளத்தின் சிஇஓ எலன் மாஸ்க்.

அதாவது டெஸ்லா கார் என்றால் மனிதர்கள் உதவியின்றி தானாகவே போகக்கூடிய ஆட்டோமேட்டிக் கார். நாம் எங்கே போக வேண்டும் எப்படி போக வேண்டும் என்று அறிவுறுத்தலின்படி அந்த கார் ஆட்டோமேட்டிக்காக போய்க் கொண்டிருக்கும் Rechargeable Energy storage system. அப்படிப்பட்ட அரியவகையான சொகுசான விலைமதிக்கக்கூடிய கார் தான் டெஸ்லா.

இது இந்தியாவில் இன்னும் அதிகபட்சமாக வரவில்லை என்றாலும் மற்ற நாடுகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அப்படிப்பட்ட இந்த நிறுவனத்தின் சிஇஓ எலன் மாஸ்க் இந்த கார் முற்றிலும் பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு ஒரு தமிழன் தான் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

elon musk (2)
elon musk (2)

அதாவது இந்த கார் சாதாரணமாக உருவாக்கப்பட்ட நிலையில் இதை ஆட்டோமேட்டிக்காக AI டெக்னாலஜி மூலம் இந்த அளவுக்கு உருவாக்கியது அசோக் எல்லுச்சாமி. ஆரம்பத்தில் இவர் பொறியாளர் பணிக்கு சேர்ந்தார். அதன் பின் தொழில்நுட்ப குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டார். அடுத்ததாக டெஸ்லா ஆட்டோ பைலட் சாப்டர் குழுவின் தலைமை பொறுப்புக்கும் 2019 ஆம் ஆண்டிற்கு வந்தார்.

இதனை தொடர்ந்து இவருடைய சுயமான புத்திசாலித்தனமான திறமையை காட்டி தானாக இயங்கக்கூடிய கார்களுக்கு சாப்ட்வேரை இயக்கும் விஷயத்தை கண்டறிந்தார். அதன் பின் டெஸ்லா நிறுவனத்தில் தானாக இயங்கும் கார்களில் சாப்ட்வேரை உருவாக்கும் பிரிவில் சேர்ந்து டெஸ்லா நிறுவனத்திற்கு மாபெரும் வெற்றியை கொடுத்தார்.

இதனை உரைக்க சொல்லும் விதமாக தமிழனை பாராட்டி டெஸ்லாவின் ஆட்டோ பைலட் கார் வெற்றிக்கு மிகவும் முக்கியமானவர் அசோக் எல்லுச்சாமி தான் என்று இந்த நிறுவனத்தின் சிஇஓ எலன் மாஸ்க் புகழ்ந்து பேசி இருக்கிறார். அந்த வகையில் தமிழனின் அடையாளத்தை நாலாபக்கமும் நிறுத்திய பெருமை அசோக் எல்லுச்சாமியை சாரும்.

- Advertisement -spot_img

Trending News