திரைக்கதையில் மாயாஜால வித்தை காட்டிய மகாராஜா.. அட்ராசிட்டி கிளப்பிய விஜய் சேதுபதியின் 50வது படம்

Master class Maharaja: மகாராஜா விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம். பிரிவியூ சோ பார்த்தவர்கள் படத்தை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அந்த அளவிற்கு படத்தை நித்திலன் சுவாமிநாதன் செமையா செஞ்சி வைத்திருக்கிறாராம். விஜய் சேதுபதிக்கு இது ஒரு சூப்பர் ஹிட் படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சலூன் கடை வைத்திருக்கும் மகாராஜா தான் விஜய் சேதுபதியின் கேரக்டர். ஆரம்பத்தில் இருந்தே லட்சுமியை காணவில்லை என இவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பண்ணும் அட்ராசிட்டி தெறிக்க விடுகிறது. உடும்பு பிடி என்றால் இதுதான் என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது விஜய் சேதுபதியின் நடிப்பு.

நியாயமான அதிகாரியாக வரும் நட்டி நடராஜனை சுற்றலில் விடுகிறார். விஜயசேதுபதி. ஒரு கட்டத்தில் போலீஸ்காரர்களுக்கு லட்சுமி கண்டுபிடித்து கொடுத்தால் 7 லட்சம் ரூபாய் தருவதாக சொல்கிறார். அதிலிருந்து கதை அட்ராசிட்டியாய் நகர்கிறது. திருட்டுத் தொழில் செய்யும் வில்லனை கண்டுபிடிக்கும் வரை தெறிக்க விடுகிறார்.

அட்ராசிட்டி கிளப்பிய விஜய் சேதுபதியின் 50வது படம்

வில்லனாக வரும் அனுராக் காசிப் இவ்வளவு நாள் எங்கே இருந்தார் என்று தெரியவில்லை. சரியான நடிப்பு ராட்சசன் என்றால் இவர் தான். கடைசி 20 நிமிடம் மொத்த பார்வையாளர்களையும் சீட்டின் நுனியை விட்டு நகல விடாமல் செய்திருக்கிறது இவரது நடிப்பு.

படத்தில் அனுராக் காஷ்யப் ,விஜய் சேதுபதி என எல்லோரும் தூண் போல் தாங்கி நிற்கிறார்கள். பாரதிராஜா, சிங்கம் புலி, பாய்ஸ் மணிகண்டன் என மொத்தமாய் நடித்தவர்கள் எல்லோரும் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்கள். எடிட்டர் பிலோமீன் ராஜ் புகுந்து விளையாடி இருக்கிறார்.

திரைக்கதையில் மாயாஜால வித்தை செய்திருக்கிறார் நித்திலன் சுவாமிநாதன். மிக மிக சஸ்பென்ஸ் ஆக செல்லும் திரைக்கதை கடைசி ஒரு மணி நேரம் பட்டையை கிளப்புகிறதாம். மொத்தத்தில் இந்த படம் ஒரு மாஸ்டர் கிளாஸ் படமாக விஜய் சேதுபதிக்கு ஹிட் ஆகும் என்கிறார்கள்.

Next Story

- Advertisement -