ஏ ஆர் ரகுமானை டம்மியாக்கி அனிருத்தை தூக்கி விட்ட நபர்.. கடும் மொக்கையான இந்தியன் 2

காதலன், இந்திரன, முதல்வன்,சிவாஜி என சங்கர் இயக்கிய அனைத்து படங்களிலும் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைப்பாளர். ஆனால் இப்பொழுது சங்கர் இயக்கத்தில் வெளிவரும் இந்தியன் 2 படத்திற்கு மட்டும் அனிருத்தை கொண்டு வந்து, ஏ ஆர் ரகுமானை கழட்டி விட்டுவிட்டார்.

இப்படி பெரிய பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் அனிருத்தையே கமிட் செய்வதற்கு பின்னால் ஒரு பெரிய காரணம் இருக்கிறது. அனிருத்தும் திறமை வாய்ந்தவர் தான். ஆனால் அவருக்கு எளிதாக எல்லா வாய்ப்பும் வந்து சேருகிறது. இவர் போல் திறமையுள்ள பல இசையமைப்பாளர்கள் வாய்ப்புக்காக காத்துக் கிடக்கின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக அதிர்ச்சி என்னவென்றால் எப்பொழுதுமே ரகுமானை கமிட் செய்யும் சங்கரே இப்பொழுது அனிருத்தை கமிட் செய்தது தான் பெரிய ஆச்சரியம். இப்படி அனிருத் பக்கம் அனைவரும் சாய்வதற்கு காரணம் என்ன, இதற்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதுதான் அனைவரது கேள்விகள.

ஏ ஆர் ரகுமானை டம்மியாக்கி அனிருத்தை தூக்கி விட்ட நபர்

அனிருத் இந்த அளவிற்கு வளர்வதற்கு காரணம் அவருடைய மாமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அவர் மேடையிலேயே ஒரு முறை சிறு வயதில் இருந்தே அனிருத்தை நான் பார்த்து வருகிறேன். வருங்காலத்தில் பெரிய இசையமைப்பாளராக வருவான் என்பது எனக்கு தெரியும் என்று ஏற்கனவே கூறி இருந்தால்

அதுமட்டுமின்றி மறைமுகமாக இவருக்கு சிபாரிசம் செய்து வருகிறார். ஜெயிலர் படத்தில் நன்றாக போட்டிருந்தார் அனிருத், அதுவும் தற்போது அவருக்கு ஒரு பெரிய பலமாக அமைந்து வருகிறது. அனிருத்தின் திறமை எழுபது சதவீதம் என்றால் ரஜினியின் சப்போர்ட் மீதமுள்ள 30 சதவீதம் அவருக்கு உதவுகிறது.

இப்பொழுது இந்தியன் இரண்டாம் பாகத்தில் அனிருத் தான் இசையமைத்துள்ளார். ஆனால் இந்த படத்தில் அவருடைய பேக்ரவுண்ட் மியூசிக் எடுபடவில்லை. ஒரு படத்திற்கு பிளஸ் பாயிண்டாக அமைவது இதுதான். ஜெயிலரில் கொடுத்தது போல் இதில் கொடுக்க தவறி விட்டார் அனிருத்