ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

பாண்டியனிடம் போட்டுக் கொடுத்த தங்கமயில்.. திருந்தாத ஜென்மத்துக்கு மீனா ராஜி சேர்ந்து கொடுக்கும் பதிலடி

Pandian Stores 2 serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கோமதியிடம் ராஜி நீங்க தான் மாமா கிட்ட எப்படியாவது பேசி நான் டியூஷன் எடுப்பதற்கு சம்மதம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதன்படி கோமதி, பாண்டியன் வீட்டிற்கு வந்ததும் பேசுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் வீட்டிற்குள் நுழைந்த பாண்டியன் கடையில் பிரச்சினை பணம் கொடுக்காத நபர்களை பற்றி பேசி டென்ஷனாக இருக்கிறார்.

இதனால் எப்படி பேசுவது என்று தெரியாமல் கோமதி எதையும் சொல்லவில்லை. பிறகு அனைவரும் சாப்பிட வந்து நிலையில் கோமதி உப்புமா பண்ணி கொடுத்திருக்கிறார். இதை பழனிச்சாமி என்ன சிம்பிளா பண்ணிட்ட வேற எதுவும் இல்லையா என்று கேட்கிறார். அதற்கு தங்கமயில் நான் ஏதாவது பண்ணுகிறேன் என்று அத்தையிடம் சொன்னேன். ஆனால் அத்தை தான் என்னை சமைக்க விடவில்லை என்று சொல்லிவிட்டார்.

குடும்பத்தை பிரிக்க சகுனி வேலையை செய்யும் தங்கமயில்

உடனே கோமதி ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டால் ஒன்னும் ஆகாது. ஒழுங்கா சாப்பிடு என்று அதட்டுகிறார். பிறகு அனைவரும் வேண்டாம் வெறுப்பாக சாப்பிட்டு முடிக்கிறார்கள். அப்பொழுது ராஜி, என்ன அத்தை இன்னும் சொல்லவில்லை மாமாவிடம் எப்படியாவது பேசுங்கள் என்று கோமதியிடம் சொல்கிறார். அதற்கு கோமதி கொஞ்சம் பொறுத்து இரு நான் சொல்லி சம்மதம் வாங்குகிறேன் என்று கூறிவிட்டார்.

பிறகு மாடியில் பழனிச்சாமி, செந்தில் மற்றும் சரவணன் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது பழனிச்சாமி உப்புமா சாப்பிட்டது சாப்பிட்ட மாதிரியே இல்லை என்பதால் கதிருக்கு போன் பண்ணி புரோட்டா வாங்கிட்டு வர சொல்லி இருக்கிறேன் எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று சொல்கிறார். அப்பொழுது கதிர் புரோட்டா வாங்கிட்டு வந்த நிலையில் அனைவரும் சாப்பிடுகிறார்கள்.

அந்த நேரத்தில் மீனா மற்றும் ராஜியும் பார்த்து சாதாரணமாக மாடியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே எதர்ச்சியாக வந்த தங்கமயில், இப்படியெல்லாம் மாமாவுக்கு தெரியாமல் சாப்பிடுவது தவறு இல்லையா என்று ரொம்ப நல்லவர் போல பேசி டிராமா பண்ணுகிறார். அதற்கு ராஜி, நீங்க கூட தான் மாமாக்கு இஷ்டம் இல்லாமல் தியேட்டருக்கு போய் பாப்கான் எல்லாத்தையும் வாங்கி சாப்பிட்டீர்கள் அது மட்டும் தவறு இல்லையா என்று கேட்கிறார்.

அதற்கு தங்கமயில் அதுவும் இதுவும் ஒன்னும் இல்லை என்று சொல்லி புருஷன் சரவணனை சாப்பிட விடாமல் தடுத்து கூட்டு போய் விடுகிறார். அப்பொழுது கணக்கு பார்த்துக் கொண்டிருந்த பாண்டியனிடம், தங்கமயில் மாடியில் அனைவரும் புரோட்டா சாப்பிடுவதை போட்டு கொடுத்து விடுகிறார். உடனே பாண்டியன் மாடிக்கு போய் வழக்கம் போல் அனைவரையும் திட்டி விட்டு போய்விட்டார்.

இதனைத் தொடர்ந்து தங்கமயில், பாண்டியன் கடைக்கு போய்க் கொண்டிருக்கும் பொழுது அதே வழியாக கோவிலுக்கு போயிட்டு வருகிறார். அப்பொழுது இருவரும் பேசிக் கொண்டு வரும்பொழுது ராஜி டியூஷன் எடுப்பதை பாண்டியனிடம் போட்டுக் கொடுத்து விடுகிறார். இதனால் உக்கிரமான பாண்டியன் வீட்டிற்கு வந்து ருத்ர தாண்டவம் ஆடுகிறார். மீனாவை பிடித்து திட்டி அவமானப்படுத்தி பேசுகிறார்.

ஆக மொத்தத்தில் இந்த தங்கமயில் இருக்கும் வரை பாண்டியனும் உருப்பட மாட்டார், வீட்டில் இருப்பவர்களையும் சந்தோசமாக இருக்க விடமாட்டார். இதற்கெல்லாம் மொத்தமாக ஆப்பு வைக்கும் விதமாக தங்கமயில் தான் இதற்கெல்லாம் காரணம் என்று மீனா ராஜிக்கு தெரிய வரப்போகிறது. இந்த திருந்தாத தங்கமயிலுக்கு ஏதாவது ஒரு பதிலடி கொடுக்க வேண்டும் என்று ராஜி மீனாவும் சேர்ந்து கவுக்கப் போகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்

Trending News