Ethirneechal: சன் டிவியில் எத்தனையோ சீரியல்கள் வந்தாலும் மறக்க முடியாத சில சீரியல்கள் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. அதில் ராதிகா மூலமாக வந்த சித்தி, செல்வி, அண்ணாமலை மற்றும் கோபி என்கிற திருமுருகன் மூலம் வந்த மெட்டிஒலி, நாதஸ்வரம், கல்யாண வீடு. அடுத்ததாக இயக்குனர் திருச்செல்வம் என்கிற ஜீவானந்தம் மூலம் வந்த கோலங்கள் மற்றும் எதிர்நீச்சல்.
அதிலும் சமீபத்தில் எதிர்நீச்சல் சீரியல் அவசர அவசரமாக முடிந்ததால் மறுபடியும் இதனுடைய தொடக்கத்தை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இயக்குனர் திருச்செல்வம் இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார். அதற்கு பதிலாக வேற ஒரு டிராக் மூலம் சீக்கிரமாக என்ட்ரி கொடுப்பேன் என்று பேட்டியளித்திருக்கிறார்.
டிஆர்பி ரேட்டிங்கில் சரித்திரம் படைக்க வரும் கோபி
இந்த சூழலில் சூட்டோட சூட்டாக எதிர்நீச்சல் இடத்தை நிரப்ப வேண்டும் என்று சன் டிவி சேனல் கலாநிதி மாறன் முடிவு எடுத்திருக்கிறார். அந்த வகையில் அவர் போட்ட பிளான் என்னவென்றால் ஜீவானந்தத்திற்கு போட்டியாக கோபி நாடகம் வந்தால் மக்கள் அமோக வரவேற்பு கொடுப்பார்கள். அதனால் திருமுருகன் ரெடி பண்ணி வைத்திருக்கும் கதையை சன் டிவி சேனல் முழுமையாக கேட்டு விட்டது.
இதனை தொடர்ந்து கோபி இன்னும் ஒரு சில வாரங்களில் புது நாடகத்தின் மூலம் என்டரி கொடுக்கப் போகிறார். பொதுவாக இவர் எடுக்கக்கூடிய நாடகங்கள் குடும்பங்களை மையமாக வைத்து எந்தவித நெகட்டிவ் விமர்சனங்களும் இல்லாத வகையில் சண்டை, சச்சரவு, கோபம் என மட்டுமே போகும். அதே மாதிரி இப்பொழுது வரக்கூடிய நாடகமும் கொஞ்சம் வித்தியாசமாக இந்த காலத்துக்கு ஏற்ப எடுக்கப்பட்டிருக்கிறாராம்.
அதாவது இரண்டு காதல் கதைகளை மையமாகக் கொண்டு கதை நகரப் போகிறது. இவர்களை சுற்றி குடும்பம் சென்டிமென்ட் நகைச்சுவை போன்ற விஷயங்களும் எதிர்பார்க்கலாம் என்று கோபி கூறி இருக்கிறார். இதில் நடிப்பதற்கு நாதஸ்வரம் நாடகத்தில் நடித்த சில ஆர்டிஸ்ட்களையும், மெட்டிஒலி சீரியலில் நடித்த கதாபாத்திரங்களை வைத்து நாடகம் இருக்கப் போகிறது.
ஆனால் இதில் கோபி கெஸ்ட் ரோலாக தான் இருப்பார். அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எல்லா நாடகத்தை விட கோபியின் புது நாடகம் டிஆர்பி ரேட்டிங்கில் சிம்ம சொப்பனமாக ஜொலிக்க போகிறது.
எதிர்நீச்சலின் சுவாரசியமான எபிசோடுகள்
- Ethirneechal: குணசேகரன் பிளான் படி ஞானம் மூஞ்சியில் கரியை பூச போகும் முட்டா பீஸ்
- Gunasekaran: ரேணுகா மனக்கஷ்டத்தை போக்கிய சர்வாதிகாரி
- குணசேகரனுக்கு சாதகமாக அப்பத்தா சொன்ன ஒத்த வார்த்தை