Rachitha Mahalakshmi: ரக்ஷிதா சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து விட்டது. தொடர்ந்து ஜீ தமிழில் சீரியலிலும் நடித்து சின்னத்திரை நாயகியாக வலம் வந்தார். அதன் பின் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ். ஆனால் இதில் போன பிறகு ஒரு சைலன்ட் கில்லர் ஆக பைனல் வர தாக்கு பிடித்து வந்தார்.
இதனால் ரக்ஷிதாவுக்கு இருந்த ரசிகர்கள் கொஞ்சம் குறைய ஆரம்பித்து விட்டார்கள். அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் பெருசாக இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் பிக் பாஸ் போய்ட்டு வந்த பிறகு இவரிடம் பல மாற்றங்களை பார்க்க முடிந்தது. மாடர்ன் லுக்கில் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி, கவர்ச்சிகரமான போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.
ரட்சிதா போட்ட பதிவுக்கு பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்
அப்படிப்பட்ட இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவருக்கு எப்படி பிக் பாஸ் மூலம் இந்த வாய்ப்பு கிடைத்ததோ, அதே மாதிரி பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸும் இணைந்து ஒரே படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி இவர்கள் இணைந்த படம் தான் ஃபயர். இவர்களுடன் சேர்ந்து சாக்ஷி, சாந்தினி, சுரேஷ், சிங்கம்புலி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
தயாரிப்பாளரும் நடிகருமான ஜே சதீஷ்குமார் என்பவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கிறார். ஜே.எஸ்.கே பிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, டி.கே இசையமைத்துள்ளார். இப்படத்தின் கதையானது நான்கு பெண்களைப் பற்றி சுற்றி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டு ஒரு விழிப்புணர்வு படமாக இயக்கியிருப்பதாக இயக்குனர் ஒரு நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.
இப்படத்தில் க்ளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் அதில் பாலாஜி முருகதாஸின் நடிப்பு பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. படபிடிப்பு முடிந்த நிலையில் ரிலீஸ்காண வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் சமீபத்தில் போட்ட பதிவு என்னவென்றால் ஃபயர் படத்தில் நடித்ததற்காக இதுவரை ஒரு சிங்கிள் பேமென்ட் கூட வாங்கவில்லை. இதனால் மொத்த சினிமாவையும் நான் வெறுக்கிறேன். சினிமாவை விட்டு விலக நினைக்கிறேன் என்று போட்டிருந்தார்.
அந்த வகையில் இவர் கூறிய விஷயத்திற்கு வக்காலத்து வாங்கும் விதமாக ரக்ஷிதா மகாலட்சுமி அவருடைய கருத்தை பதிவிட்டு இருக்கிறார். அதாவது பாலாஜி சொன்னது உண்மைதான் இந்த படத்திற்காக இன்னும் நாங்கள் சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லி, நீங்கள் தயாரிப்பாளராக இருக்கலாம் அதற்காக என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்று நினைக்காதீர்கள். தன் வினை தன்னை சுடும் நீங்கள் ஒரு தயாரிப்பாளர் என்று சொல்வதற்கு தகுதி அற்றவர் என்று கூறி Shit என சொல்லி இருக்கிறார்.
இப்படி இவர்கள் இருவரும் தயாரிப்பாளர்களை குற்றம் சாற்றிய நிலையில், இவர்கள் இருவருக்கும் சேர்த்து தயாரிப்பாளர் அதிரடியாக பதிலடி கொடுத்திருக்கிறது. அதாவது நீங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டுதான் நடித்திருக்கிறீர்கள். இலவசமாக நடித்துக் கொடுக்கவில்லை. அதற்கான அக்ரீமெண்ட் என் கையில் தான் இருக்கிறது. நீங்கள் பணம் வாங்கினதற்கு ஆதாரம் நான் சோசியல் மீடியாவில் காட்டினால் உங்கள் தரம் தாழ்ந்து போகும். தேவைப்பட்டால் நான் எல்லாத்தையும் சோசியல் மீடியாவில் போடுவதற்கு தயாராக இருக்கிறேன்.
இந்த படத்தில் நீங்கள் நடித்ததை மறந்துவிட்டு shit என்று விமர்சனம் செய்திருக்கிறீர்கள். அந்த shitல் நீங்களும் தான் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
ரட்சிதாவின் குதூகலமான புகைப்படம்
- ரக்டுபாயாக இருந்த பாலாஜியை கதறவிட்ட தயாரிப்பாளர்
- Rachitha: இடுப்பு மடிப்பில் ரம்யா பாண்டியனை ஓரம் கட்டும் ரக்ஷிதா
- குடும்ப குத்து விளக்குன்னு நினைச்சா அது உன் தப்பு