வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அதிதியை வைத்து மீண்டும் விஷப் பரீட்சையில் இறங்கும் ஷங்கர்.. இந்தியன் 2 திருப்பிக் கொடுத்த அடி பத்தல போல!

Shankar : இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் இப்போது கதாநாயகியாக படங்களில் நடித்து வருகிறார். கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் கதாநாயகி ஆன அதிதிக்கு தந்தையால் தான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது என்ற விமர்சனங்களும் அப்போது எழுந்தது.

இந்நிலையில் ஷங்கரின் இந்தியன் 2 படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு மிகவும் நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. மேலும் எதிர்பார்த்த அளவு வசூலும் பெறாத நிலையில் ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இந்தியன் 2 படம் ஆகஸ்ட் 15 அல்லது 27ஆம் தேதி ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் போட்ட பட்ஜெட்டை கூட லைக்கா நிறுவனம் எடுப்பது கடினம் தான்.

ஷங்கர் படத்தில் நடிக்கும் அதிதி

இந்த சூழலில் இந்தியன் 2 பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் ஷங்கர் கலந்து கொண்ட போது மகளை வைத்து படம் எடுப்பீர்களா என தொகுப்பாளர் கோபிநாத் கேட்டிருந்தார். ஆரம்பத்தில் மலுப்பலாக பதிலளித்த ஷங்கர் அதன் பிறகு அதிதிக்காக ஒரு கதாபாத்திரம் தயாராக உள்ளது என்று கூறினார்.

மேலும் ஒரு தந்தையாக இல்லாமல் இயக்குனராக அவரிடம் நடிப்பு திறமை இருப்பதை தான் உணர்ந்ததாகவும் கூறினார். ஏற்கனவே விருமன், மாவீரன் படங்களில் அதிதியின் கேரக்டர் பெரிய அளவில் பேசாத நிலையில் ஷங்கர் விஷ பரீட்சையில் இறங்குகிறார் என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

இந்தியன் 2 கொடுத்த அடி பத்த வில்லையா, ஏன் அதிதியை படத்தில் நடிக்க வைக்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுதுகிறது. மேலும் தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் தான் இந்தியன் 2 படத்தின் தோல்வியை மறக்க அடிக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

இந்தியன் 2 வால் ஷங்கருக்கு ஏற்பட்ட தலைவலி

Trending News