வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மனோஜை ஏமாற்ற மொட்டை கடிதாசி போட்ட கடையாட்கள்.. டிமான்ட் பண்ணிய முத்து, எஸ்கேப் ஆகும் ரோகினி

Sirakadikka Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பாட்டி வந்ததும் அண்ணாமலையை விஜயாவிடம் பேச வைத்து விட்டார். அந்த வகையில் இருவரும் சமாதானம் ஆனதும் வழக்கம் போல் விஜயா, மீனாவை எல்லோருக்கும் சமையல் பண்ணி சீக்கிரம் கொடு என்று அதிகாரம் பண்ண ஆரம்பித்து விட்டார். இதை பார்த்த பாட்டி, மீனா அவ புருஷனுக்கு பண்ணிக் கொடுப்பார்.

நீ உன் வீட்டுக்காருக்கு தேவையானதை நீ பண்ணு, அதே மாதிரி எல்லா மருமகளும் அவங்க அவங்க வீட்டுக்காரங்களுக்கு பண்ணிக் கொடுக்கட்டும் என்று சொல்கிறார். இதை கேட்டதும் ரோகிணி, பாட்டி என்னால முடியாது என்று சொல்கிறார். அப்பொழுது சுருதி எனக்கு இதெல்லாம் தெரியாது வராது என்று சமையல் செய்ய மறுக்கிறார். அப்படி என்றால் உங்க வீட்டுக்காரரை உங்களுக்கு உதவிக்கு கூப்பிட்டுக்கோங்க என்று பாட்டி சொல்கிறார்.

கடையை இழந்து தவிக்கப் போகும் மனோஜ்

அதன்படி விஜயா தோசை சுடும் பொழுது அண்ணாமலை கூடவே இருந்து இருவரும் சேர்ந்து சமையல் பண்ணுகிறார்கள். அதே மாதிரி சுருதி ரவி, மனோஜ் ரோகினி மற்றும் முத்து மீனா அனைவரும் தோசை சுட்ட பிறகு ஒன்றாக எல்லாரும் சாப்பிட இருக்கிறார்கள். அப்போது பாட்டி நீங்க தோசை சுட்டதை நீங்கள் சாப்பிடாமல் உங்கள் வீட்டுக்காரருக்கு மாத்தி மாத்தி ஊட்டி விட்டு சாப்பிடுங்கள் என்று அன்பாக இருக்கும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்கிறார்.

இதற்கிடையில் மாதம் மாதம் மனோஜ், முத்துவிற்கு சேர வேண்டிய பணமும் அண்ணாமலைக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் சேர்த்து ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பாட்டி சொல்லி இருக்கிறார். இதை கொடுக்க எப்படி முடியும் என்று மனோஜ் யோசித்த நிலையில் விஜயா, ரோகினிடம் உங்க அப்பாவிடம் சொல்லி எப்படியாவது ஏற்பாடு பண்ணி பணத்தை கொடுக்கப் பாரு.

அப்பொழுது தான் மறுபடியும் இந்த வீட்டில் நம்ம மரியாதையா கெத்தா இருக்க முடியும் என்று ரோகினிக்கு செக் வைக்கிறார். ஆனால் ரோகிணி நம்முடைய லாபத்தை எல்லாம் இவர்களுக்கு கொடுத்து விட்டால் நாம் எப்பொழுது சேர்த்து வைப்பது என்று யோசித்து இதில் இருந்து எப்படியாவது எஸ்கேப் ஆக வேண்டும் என தில்லாலங்கடி வேலைக்கு பிளான் பண்ணுகிறார். அதனால் முத்து டிமாண்ட் பண்ணிய பணம் கிடைப்பது கொஞ்சம் சந்தேகம் தான்.

இதனை தொடர்ந்து ஷோரூமுக்கு போன மனோஜ்க்கு ஒரு மொட்டை கடிதாசி வருகிறது. அதை படித்துப் பார்க்கும் பொழுது உங்களை சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் ஏமாற்றுகிறார்கள். கொஞ்சம் உஷாராக இருங்கள் யாரையும் நம்பாதீங்க என்று அதில் போட்டிருக்கிறது. இதை பார்த்ததும் அதிர்ச்சியில் பயத்துடன் மனோஜ், ரோகினிடம் சொல்கிறார்.

ரோகிணி இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை உன்னை யாராவது பிராங்க் பண்றதுக்கு இந்த மாதிரி பிளான் பண்ணி இருப்பார்கள். இதை பெருசா எடுத்துக்காத போய் வேலையை பாரு என்று சொல்கிறார். ஆனால் கடையில் இருக்கும் நபர்களுக்கு மனோஜ் ஒரு மக்கு, அவரை ஈசியாக ஏமாற்றலாம் என்று தெரிந்து விட்டது. அதனால் அவர்கள் தான் இந்த மொட்டை கடிதாசை போட்டு மனோஜிடம் இருந்து மொத்த பணத்தையும் ஆட்டைய போட்டு கடையை இழக்கும் அளவிற்கு சம்பவம் செய்யப் போகிறார்கள்.

கடைசியில் எல்லாம் போச்சு என்று சொல்வதற்கு ஏற்ப ஜீவா கொடுத்த பணமும் இல்லாமல், கடையும் இல்லாமல் மனோஜ் நிற்கப் போகிறார். மனோஜை வைத்து எப்படியாவது தனி குடித்தனம் போயி நல்லா ஒரு வாழ்க்கையை வாழனும் என்று யோசித்து வைத்த ரோகிணி பிளானும் சொதப்ப போகிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News