வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

சூர்யாவை கெடுத்து குட்டிச்சுவராக்கிய லோகேஷ்.. பேரழகன் படத்தில் ஆரம்பித்ததை தூக்கி எறிந்த ரோலக்ஸ்

சூர்யா ஜூலை 23 அன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரின் ரசிகர்கள் 6000 பேர் இரத்ததானம் கொடுத்து அசத்தினார்கள். இவர்கள் ஆளாளுக்கு 200ml என அரசாங்க மருத்துவமனையில் தானம் செய்தனர். எந்த நடிகர்களுக்கும் இதுவரை ரசிகர்கள் இப்படி செய்ததில்லை.

சூர்யா, தனியார் மருத்துவமனையில் கொடுக்க வேண்டாம் என்றும் அரசாங்க மருத்துவமனையில் தான் இரத்ததானம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். இப்படி ஒரு பக்கம் ரசிகர்களை வழி நடத்தியும், ஏழை எளிய குழந்தைகளின் படிப்புக்கு உதவியும், பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.

சூர்யா பேரழகன் படத்தில் நடிக்கும் பொழுது ஏவிஎம் சரவணன், அவரிடம் உங்கள் அப்பா சினிமா துறையில் மிகவும் கண்ணியமான நபர் அவர் பெயரை காப்பாற்றுங்கள் என அறிவுரை கூறியுள்ளார். சிவகுமாரிடம் டீ, காபி குடிக்கும் பழக்கம் கூட கிடையாது எனவும் கூறி இருக்கிறார்.

பேரழகன் படத்தில் ஆரம்பித்ததை தூக்கி எறிந்த ரோலக்ஸ்

ஏவிஎம் சரவணன் வாக்கை பேரழகன் படத்தில் இருந்து பின்பற்றி வந்தார் சூர்யா. அதன்பின் நடித்த படங்களில் சிகரெட் மற்றும் மது சம்பந்தப்பட்ட காட்சிகள் இல்லாதவாறு பார்த்துக் கொண்டார். படம் ஓபனிங் காட்சியில் மது மற்றும் சிகரெட் டைட்டில் கார்டு கூட வராதாம். இப்படி நடித்துக் கொண்டிருந்த சூர்யாவை கெடுத்து குட்டி சுவராக்கியது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் .

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா ஏற்று நடித்த கதாபாத்திரம் தான் அடுத்தடுத்து சூர்யா சிகரெட் போதை போன்ற காட்சிகளில் நடிப்பதற்கு காரணமாக அமைந்தது. அந்த கதாபாத்திரத்தை ஒரு பிரிவு மக்கள் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.

இப்பொழுது சூர்யா 44 படத்தில் வெளிவந்த கிளிம்ஸ் வீடியோவில் புகை பிடித்துக் கொண்டு வருகிறார் சூர்யா. இப்படி மக்கள் மற்றும் இளைஞர்களை கெடுக்கும் விதமாக சூர்யா மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டார். ஒரு கட்டத்தில்நல்ல விதமாய் நடித்துக் கொண்டிருந்த சூர்யா இப்பொழுது ரோலக்ஸ் கதாபாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பால் மீண்டும் மோசமாய் நடிக்க ஆரம்பித்து விட்டார் என்பதுதான் அனைவரின் குற்றச்சாட்டு.

- Advertisement -

Trending News