Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் புக் பண்ணிய ஹோட்டலின் விலை அதிகமாக இருப்பதால் அதைப் பற்றி அம்மாவிடம் பேசிக்கொண்டார். அதற்கு பாக்கியமும் இதைப் பற்றி எதையும் யோசிக்காமல் மாப்பிள்ளையை கூட்டிட்டு முதலில் ஹனிமூன் கிளம்பி போங்க. எது நடந்தாலும் அப்புறமாக பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்.
இப்படி தங்கமயில் அம்மாவிடம் பேசிட்டு திரும்பிய நிலையில் ஒரு மறைமுகமான உருவத்தை பார்த்து பயந்து போய் கத்தி விடுகிறார். அதன் பிறகு பாண்டியன் மற்றும் கதிரும் வந்து விடுகிறார்கள். அந்த உருவம் யார் என்றால் பழனிச்சாமி தான் தண்ணீர் குடிப்பதற்காக வந்திருக்கிறார். பிறகு பாண்டியன், தங்கமயில் இடம் இந்நேரம் நீ ஏன் வெளியே வந்தாய் என்று கேட்கிறார். அதற்கு தண்ணீர் குடிக்க வந்தேன் என்று சொல்கிறார்.
மகனிடம் வெறுப்பை சம்பாதிக்கும் பாண்டியன்
பிறகு வழக்கம் போல் பாண்டியன், பழனிச்சாமியை திட்டிவிட்டார். அடுத்ததாக மீனா ராஜி இருவரும் சேர்ந்து கோலம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்திலேயே கதிர் பைக்கை துடைத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது செந்தில் நடை பயிற்சிக்கு போயிட்டு வருகிறார். உடனே மீனாவை பார்த்ததும் செந்தில் அப்படியே நைசாக உள்ளே போய்விடலாம் என்று யோசித்தார்.
ஏனென்றால் மீனா, செந்தில் கவர்மெண்ட் வேலையில் சேர்வதற்காக பல டிப்ஸ்களையும், புத்தகங்களையும் கொடுத்து படிக்க சொன்னார். ஆனால் அது எதையும் செய்யாமல் செந்தில் தூங்கியதால் மீனாவிடம் நன்றாக அடி வாங்கிக் கொண்டார். பிறகு கதிர் ராஜியும் சேர்ந்து மீனாவுக்கு சப்போட்டாக செந்திலை நக்கலடித்து பேசினார்கள்.
அடுத்ததாக செந்தில் இனி நான் படிப்பில் கவனமாக இருக்கிறேன், கூடிய சீக்கிரத்தில் எக்ஸாமில் பாஸ் பண்ணுகிறேன் என்று சொல்லிவிட்டார். அப்பொழுது மீனா அதற்கு முதலில் தினமும் இங்கிலீஷ் நியூஸ் பேப்பர் படிக்க வேண்டும். அதன் மூலம் தான் பொதுவான விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். அது உனக்கு ரொம்பவே உதவியாக இருக்கும் என்று சொல்கிறார்.
மீனா சொல்லியதற்கு எல்லாம் செந்தில் சரி என்று தலையாட்டி கொண்டார். இதனைத் தொடர்ந்து வீட்டுக்குள் வழக்கம்போல் மாநாடு ஆரம்பித்து விட்டது. அப்பொழுது வந்த பாண்டியன், சரவணன் தங்கமயில் சென்னைக்கு கிளம்புவதற்கு டிக்கெட் அனைத்தையும் போட்டு கொடுத்து விடுகிறார். இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பண்ணும் பாண்டியன், சரவணன் மற்றும் தங்கமயிலுக்கு அதிகமாக இடம் கொடுத்து ஓரவஞ்சகம் காட்டுகிறார்.
ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத மீனா, பாண்டியனிடம் நாளையிலிருந்து இங்கிலீஷ் பேப்பரும் வேணும் மாமா. அதிலிருந்து படிக்க வேண்டும் என்று சொல்லிய நிலையில் அதெல்லாம் எதுக்கு தேவையில்லாமல், இந்த தமிழ் பேப்பரை நான் மட்டும் தான் படிக்கிறேன். வேற யாரும் இதை எடுத்துக் கூட பார்க்க மாட்டாங்க. இதுல இங்கிலீஷ் நியூஸ் பேப்பர் வேற வேஸ்ட் என்று சொல்கிறார்.
உடனே ராஜி, இல்ல மாமா கவர்மெண்ட் எக்ஸாமுக்கு படிக்கிறதுனால எனக்கும் அந்த இங்கிலீஷ் பேப்பர் தேவைப்படும் என்று சொல்கிறார். ஆனால் பாண்டியன் தேவையில்லாமல் ரூ.300 செலவு பண்ண முடியாது என்று சொல்கிறார். இதை கேட்ட மீனா நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம் மாமா. நான் கொடுத்து விடுகிறேன் என்று எதார்த்தமாக சொல்கிறார். இதை கேட்டதும் பாண்டியன் பணம் யார் பணம்நாளும் ஒன்னு தான். தேவை இல்லாமல் செலவழிக்க வேண்டாம் தான் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.
உடனே மீனாவும் இங்கிலீஷ் பேப்பரை வேண்டாம் என்று சொல்லி ரூமுக்குள் போய்விடுகிறார். இதனை எல்லாம் பார்த்த செந்தில், பாண்டியனை திட்டும் விதமாக சரவணன் மற்றும் கதிரிடம் வெறுப்பாக பேசிக் கொள்கிறார். மீனா எவ்வளவோ அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கிற, ஆனா அதை கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம அப்பா இப்படியே பண்ணுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. என்று பொண்டாட்டி மீது இருக்கும் பாசத்தால் பாண்டியனை வெறுத்து பேசுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்
- பாண்டியனுக்கும் மகனுக்கும் வெடிக்கப் போகும் சண்டை
- பொண்டாட்டியை விட மருமகளை நம்பும் பாண்டியன்
- உஷாராக தப்பித்த மீனா ராஜி, பாக்கியா கொடுத்து ஐடியா