Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சீதா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஃபர்ஸ்ட் கிளாஸ் மார்க் எடுத்ததை மீனா மற்றும் முத்து சந்தோஷமாக வீட்டில் இருப்பவர்களிடம் சொல்கிறார்கள். ஆனால் வழக்கம் போல் விஜயா இது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல என்று குத்தி காட்டி பேசுகிறார். அதே மாதிரி மனோஜ் அம்மாவுக்கு பிள்ளை தப்பாகாது என்று சொல்வதற்கு ஏற்ப விஜயா போல், சீதாவை நக்கல் அடிக்கிறார்.
ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரோகிணி, அப்பா இல்லாத ஒரு ஏழை வீட்டு பொண்ணு படிச்சு முன்னேறுவது எவ்வளவு பெரிய கஷ்டம்னு உனக்கு தெரியாது மனோஜ். அதனால இந்த விஷயத்தை கிண்டல் பண்ணாதே என்று எல்லோரும் முன்னாடியும் திட்டுகிறார். உடனே முத்து, பார்லர் அம்மா இப்பொழுது தான் சரியாக பேசி இருக்கிறார். நீயும் கொஞ்சம் பார்த்து திருந்து என்று மனோஜை சொல்கிறார்.
மனோஜை ஏமாற்ற தந்திரமாக செயல்படும் ரோகிணி
பிறகு முத்து மீனா, சீதாவை பார்த்து வாழ்த்து சொல்வதற்காக கோவிலுக்கு போகிறார்கள். அங்கு அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்து எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டு சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள். அப்பொழுது அங்கே வந்த சத்யாவை குத்தி காட்டி பேசும் விதமாக, நீயாவது படிப்பில் கவனம் செலுத்தி குடும்பத்திற்கு ஒரு நல்ல பேரை வாங்கி கொடுத்திருக்கிறாய் என்று ஜாடமாடையாக முத்து பேசுகிறார்.
இதனை தொடர்ந்து ரோகிணி மற்றும் மனோஜ் ஷோரூமுக்கு போகிறார்கள். அங்கே போனதும் ரோகிணி வரவு செலவு கணக்கு பார்க்கிறார். அதில் மாசம் சாப்பாட்டுக்கு மட்டும் மனோஜ் 30 ஆயிரம் ரூபாய் கிட்ட செலவு பண்ணி இருக்கிறார். அத்துடன் ஜோசியர் சொன்னபடி டிரஸ் வாங்குவதற்கு என்று அதற்கும் நிறைய செலவு பண்ணி இருக்கிறார். இப்படி தேவையில்லாமல் மனோஜ் செலவு பண்ணியதற்கு ரோகிணி திட்டுகிறார்.
அந்த நேரத்தில் கிரெடிட் கார்டு கொடுத்து அதன் மூலம் செலவழிக்கலாம் என்று ஒருவர் மனோஜ்க்கு ஆசை காட்டி பேசுகிறார். இது வேண்டாம் என்று ரோகினி மனோஜ்க்கு அட்வைஸ் கொடுக்கிறார். ஆனாலும் மனோஜ்க்கு பேராசை அதிகமாக இருப்பதால் கிரெடிட் கார்ட் வாங்கி ஏமாறப் போகிறார். கடைசியில் ஷோரூம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கப் போகிறார்.
அடுத்ததாக ரோகிணி அவருடைய தோழியை கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்கு போகிறார். அங்கே குழந்தை ஏன் பிறக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற ட்ரீட்மென்ட் பண்ணலாம் என்று ரோகினி முடிவு பண்ணி இருக்கிறார். இது சம்பந்தமாக தோழியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு அவருடைய தோழி, உனக்கு தான் குழந்தை பெத்துக்க தகுதி இருக்கிறதே, ஏற்கனவே உனக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது.
அப்புறம் எதுக்கு நீ பயப்பட வேண்டும். ஒருவேளை மனோஜ்க்கு கூட பிரச்சனை இருக்கலாம், அதனால நீ செக்கப்புக்கு வரவேண்டும் என்றால் மனோஜையும் கூட்டிட்டுதான வரவேண்டும் என்று சொல்கிறார். அதற்கு ரோகினி இல்லை முதலில் நான் எல்லாம் செக்கப்பும் பண்ணிக்கனும். எங்களுக்கு இப்பொழுது குழந்தை பிறந்தால் தான் எல்லா பிரச்சினைக்கும் தீர்வாக இருக்கும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை சீதா பார்த்து விடுகிறார். அப்பொழுது மீனாவுக்கு போன் பண்ணி ஆஸ்பத்திரிக்கு ரோகிணி வந்திருக்கிறார். குழந்தை விஷயமாக ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று போட்டுக் கொடுத்து விடுகிறார். ஆனால் என்னதான் ரோகினி பற்றிய சந்தேகங்கள் வந்தாலும் இப்போதைக்கு யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்துக் கொண்டுதான் வருவார்.
சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்
- முத்து மீனாவிற்கு சம்மதம் சொல்லும் கல்யாணி
- முத்துவை மகனாக நினைத்து அட்வைஸ் கொடுத்த விஜயா
- கிரிஷ் பிறந்தநாளுக்கு போகும் மீனா முத்து