திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பாக்கியாவின் ஹோட்டலுக்கு ஆப்பு வைக்கும் கோபி.. ஈஸ்வரியால் முட்டி மோத போகும் மருமகள்கள்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா விஷயத்தை பற்றி பாக்கியா புலம்பி கொண்டு பழனிச்சாமிடம் சொல்கிறார். வழக்கம் போல் பழனிச்சாமி, பாக்கியாவை சமாதானப்படுத்தி ஆறுதல் படுத்துகிறார். ஆனாலும் இந்த பாக்கியா இனியவை நினைத்து ரொம்பவே கவலைப்பட்டு வருகிறார். அதற்கு காரணம் நாம் வீட்டில் அவளுடன் நேரம் செலவழிக்காமல் ஹோட்டல் என்று வேலை பார்ப்பதினால் தான் இந்த அளவிற்கு யோசிக்காளோ என்ற குற்ற உணர்ச்சியில் பாக்யா பீல் பண்ணுகிறார்.

அடுத்ததாக எழில், அவருடைய சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று பல ப்ராஜெக்ட்களை இயக்குனர்களிடம் கொண்டு போய் காட்டிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு கதையுடன் போன பொழுது இயக்குனர் ஓகே சொல்லிவிடுவார் என்று நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அந்த கதையும் திருப்தி அளிக்காததால் எழிலுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது.

பாக்யாவை கவுப்பதற்கு பிளான் பண்ணிய கோபி

இந்த ஏமாற்றத்துடன் எழில் வீட்டுக்கு வருகிறார். அப்பொழுது நடந்த விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்கிறார். அதற்கு தாத்தா மற்றும் அமிர்தா, எழிலுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். ஆனால் அங்கு வந்த ஈஸ்வரி எழிலை திட்டுகிறார். இதுதான் உனக்கு கனவு இலட்சியம் என்று இருந்தாலும் தனிப்பட்ட முறையில் ஒரு வேலை என்பது ரொம்பவே அவசியம்.

வேலை இருந்தால் மட்டும் தான் குடும்பத்தை பார்த்துக் கொள்ள முடியும். இப்படி கனவு லட்சியத்தை மட்டும் தூக்கி வைத்துக் கொண்டிருந்தால் எதுவும் மாறப் போகாது. அத்துடன் இன்னொரு விஷயம் நீயும் அமிர்தாவும் நான் சொன்னதை யோசித்துப் பார்த்து சீக்கிரமாக ஒரு குழந்தையை பெத்துக்க பாருங்க என்று எழிலை திட்டுகிறார்.

உடனே எழில் எதுவும் சொல்லாமல் ரூமுக்கு சென்று அப்செட் ஆக இருக்கிறார். அங்கே வந்த அமிர்தா எழிலுக்கு சப்போர்ட்டாக பேசுகிறார். அப்பொழுது என்னுடைய சினிமா தான் எனக்கு மிகப்பெரிய கனவு லட்சியமாக இருக்கிறது. அதனால் கூடிய விரைவில் அதில் நான் வெற்றியை பெறுவேன். அதுவரை நீ கொஞ்சம் பொறுத்து இரு. ஆனால் என்னுடைய சினிமா மீது எனக்கு மட்டும்தான் நம்பிக்கை இருக்கிறது.

மற்றவர்களுக்கு என் மீது நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை என்று புலம்புகிறார். இதனால் அமிர்தா மற்றும் ஜெனிக்கும் சண்டைகள் ஆரம்பமாகப் போகிறது. ஏனென்றால் வீட்டு செலவுக்காக செழியன் மட்டும் தான் சில விஷயங்களை செய்து வருகிறார். ஆரம்பத்தில் கண்டுக்காமல் இருந்த ஜெனி கொஞ்சம் கொஞ்சமாக மாறி அமிர்தாவை நோகடிக்கும் அளவிற்கு பேசப் போகிறார்.

இதனால் பாக்யா, வீட்டு மருமகளாக இருக்கும் இருவருக்கும் சண்டைகள் ஆரம்பமாகப் போகிறது. நிம்மதி இல்லாமல் தவிக்க போகிறார். இதுதான் எனக்கு வேணும் என்று எதிர்பார்க்கும் கோபிக்கு இந்த ஒரு விஷயம் சந்தோஷத்தை கொடுக்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் இன்னும் பாக்யாவின் பிசினஸை காலி பண்ணும் விதமாக ஹோட்டலை இழுத்து மூடுவதற்கு ஆப்பு வைக்கப் போகிறார்.

அதாவது கோபியும் அவருடைய நண்பரும் வழக்கம்போல் மது அருந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே வந்த நண்பர் ஒருவர் கோபியிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர் பார்த்து வந்த ஹோட்டல் சரியாக போகாததால் பாக்யாவிடம் கொடுத்து விட்டேன் என்று சொல்கிறார். இதை கேட்ட கோபி இதை வைத்தே பாக்கியாவிடமிருந்து அந்த ஹோட்டலை அபகரித்து விடலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்.

அதனால் அந்த ஹோட்டலை நண்பரிடம் சொல்லி பாக்யாவிடம் இருந்து அபகரிக்கலாம். அல்லது அந்த ஹோட்டலை நிர்வாகம் பண்ணும் பொறுப்பை கோபி ஏற்கவும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி பாக்யாவை சுற்றி ஒவ்வொரு பிரச்சனைகளாக வெடித்துக் கொண்டே வரப்போகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News