Pandian Stores 2 Serial: விஜய் டிவி ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மீனாவை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் அவங்க அப்பாவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மாமனாருக்கு பிடித்த மருமகனாக செந்தில் மாற போகிறார். அந்த வகையில் கவர்மெண்ட் எக்ஸாம் எழுதி அதில் பாஸ் பண்ணி கவர்மெண்ட் வேலையில் சேர வேண்டும் என்று சபதம் போட்டார்.
இந்த சபதத்தை கதிர் வீடியோ எடுத்து மீனாவிடம் காட்டிவிடுகிறார். மீனா, செந்திலின் அன்பை பார்த்து பூரித்து போய்விட்டார். அடுத்ததாக தங்கமயில் மற்றும் சரவணன், ஹனிமூன்க்கு கிளம்பிய நிலையில் பாண்டியன் செலவுக்காக காசை அள்ளி கொடுக்கிறார். இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாக நிற்கிறார்கள். ஏனென்றால் செந்தில் மீனா போகும்போது கம்மியான பணத்தை கொடுத்து பார்த்து செலவு செய் என்று சொல்லி அனுப்பினார்.
நீலிக்கண்ணீர் வடித்து சரவணனை ஏமாற்றும் தங்கமயில்
ஆனால் சரவணன் மற்றும் தங்கமயில் என்று வரும் பொழுது யோசிக்காமல் பணத்தை கொடுக்கிறார். அப்பொழுது தங்கமயில் அம்மா பாக்கியம், வீட்டிற்கு வந்து தங்கமயில் இடம் உனக்கு கிடைத்திருக்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாப்பிள்ளை நீ என்ன சொன்னாலும் சரி என்று சொல்லும் அளவிற்கு மாற்றி காட்டு என்று ஐடியா கொடுக்கிறார். பிறகு இவர்கள் இருவரும் சென்னைக்கு கிளம்பி விடுகிறார்கள்.
இதனை தொடர்ந்து சென்னைக்கு போனதும் சரவணன் மற்றும் தங்கமயில் ஹோட்டலுக்கு போகிறார்கள். அங்கே மீதி பணம் 21,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு சரவணன் நாங்கள் 5000 ரூபாய் கொடுத்து ஆன்லைன்ல புக் பண்ணிட்டோம் என்று சொல்கிறார். இதை கேட்டதும் ஹோட்டலில் அந்த தொகை வெறும் அட்வான்ஸ் பணம் மட்டும்தான். மீதமான பணத்தை கொடுத்தால் மட்டும்தான் உங்களை ஹோட்டலுக்கு அனுமதிப்போம் என்று சொல்லுகிறார்கள்.
இதை கேட்டதும் தங்கமயில், சரவணன் திட்டாமல் இருப்பதற்காக எதுவும் தெரியாத போல் முதலை கண்ணீர் வடித்து அழுது கொண்டு இருக்கிறார். அடுத்ததாக சரவணன் என்ன பண்ணுவது என்று தெரியாமல் கதிருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்கிறார். அப்பொழுது கதிர், கொஞ்ச நேரம் அங்கே வெயிட் பண்ணுங்க நான் பணத்தை ஏற்பாடு பண்ணுகிறேன் என்று சொல்கிறார்.
மேலும் இந்த விஷயத்தை கடைக்கு வந்து செந்திலிடம் கதிர் சொல்கிறார். அந்த நேரத்தில் பாண்டியன் போனை கடையில் வைத்து விட்டு வெளியே கிளம்பி விடுகிறார். உடனே போனை எடுத்து அதன் மூலம் பணத்தை சரவணனுக்கு அனுப்பலாம் என்று கதிர் முயற்சி எடுக்கிறார். ஆனால் செந்தில், அப்பா பணத்தை எடுத்தால் பெரிய பிரச்சினையாக மாறிவிடும். அதனால் அதை பண்ணாதே என்று சொல்கிறார்.
ஆனால் கதிருக்கு தற்போது வேறு வழி இல்லாததால் அப்பா பணத்தை ஆட்டையை போட்டு சரவணனுக்கு அனுப்பி வைக்கப் போகிறார். இதற்கிடையில் செந்தில், மீனாவிடம் பணத்தைக் கேட்டுப் பார்க்கலாம் என்று சொல்கிறார். ஆனால் அதற்கும் கதிர், அண்ணியிடம் கேட்க வேண்டாம் என்றும் மறுப்பு தெரிவிக்கிறார். இருந்தாலும் இந்த விஷயம் மீனாவிற்கு தெரிய வரும் பொழுது தங்கமயிலுக்கு உதவி பண்ணும் விதமாக பணத்தை கொடுக்க தயாராக இருக்கிறார்.
இதை எல்லாம் தாண்டி கதிர் தான் பணத்தை எடுத்து செலவு பண்ணி இருக்கிறார் என்று பாண்டியனுக்கு தெரிய வரும் பொழுது வீட்டில் மிகப்பெரிய பிரளயமே வெடிக்க போகிறது. வழக்கம் போல் இதை வேடிக்கை பார்க்கும் தங்கமயில் அப்பொழுது கூடத் திருந்த மாட்டார். கடைசி வரை பாண்டியனுக்கு வேண்டாத பிள்ளையாக கதிர் எல்லா தவறையும் அவருடைய தலையில் தூக்கி போட்டு சுமக்க போகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்
- மகன் பேசியதை கேட்டு அடிக்க கை ஓங்கிய பாண்டியன்
- பொண்டாட்டி மேல் இருக்கும் பாசத்தால் பாண்டியனை வெறுக்கும் மகன்
- மாமனார் குடும்பத்துடன் ராஜியை சேர்த்து வைக்க முடிவு பண்ணிய கதிர்