புதன்கிழமை, ஜனவரி 15, 2025

டாப் கியரை போட்டு மின்னல் வேகத்தில் போகும் 2 சீரியல்கள்.. எதிர்நீச்சல் இல்லாத குறையை தீர்த்து வைத்த கலாநிதி

Sun TV Serial: சின்னத்திரை பொருத்தவரை மக்களை என்டர்டைன்மென்ட் பண்ணுவதில் அதிகமாக இடம் பிடித்தது சீரியல் தான். அதிலும் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்த்து இல்லத்தரசிகள் நேரம் செலவழிப்பது தான். அந்த வகையில் எப்போதுமே மக்களின் ஃபேவரிட் சேனலாக இருப்பது சன் டிவி. இதில் எக்கச்சக்கமான சீரியல்கள் காலை மற்றும் மாலையில் ஒளிபரப்பாகி வந்தாலும் எப்பொழுதுமே ஈவினிங் மேல போடற நாடகத்துக்கு மவுஸ் அதிகம்.

அதனால் தான் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்று சன் டிவி முதலிடம் பிடித்திருக்கிறது. இதில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அவசரமாக முடிந்த எதிர்நீச்சல் சீரியல் ஒட்டு மொத்த குடும்பமும் பார்க்கும் வகையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. ஆனால் அது எதிர்பாராத விதமாக அவசர அவசரமாக முடிந்த நிலையில் அதனுடைய ஏக்கம் இன்னும் மக்களிடம் இருந்து கொண்டே தான் வருகிறது.

மக்களின் ஃபேவரிட் ஆக ஒய்யாரத்தில் ஜொலிக்கும் சீரியல்கள்

இதையெல்லாம் போக்கும் விதமாக கலாநிதி புது சீரியல்களை சூட்டோட சூட்டாக இறக்கினார். அந்த வகையில் தற்போது புது சீரியலாக வந்து டாப் கியரில் மின்னல் வேகத்தில் போய்க் கொண்டிருப்பது இரண்டு சீரியல்கள். அதில் ஒன்று மருமகள், எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த ஆதிரை மற்றும் பிரபுவும் நடிப்பால் அனைவரையும் கவர்ந்து விட்டார்.

அத்துடன் குடும்பமாக சேர்ந்து இவர்களுக்கு கல்யாணத்தை பண்ணுவதற்கு முடிவு பண்ணி விட்டார்கள். ஆனாலும் கல்யாணத்தை நிறுத்த விருப்பம் இல்லாத ஆதிரை மற்றும் பிரபு தனியாக பேசிக்கொண்டு ஒருத்தரை ஒருத்தர் நன்றாக புரிந்து கொண்டார்கள். தற்போது யார் நினைத்தாலும் நம்ம கல்யாணத்தை நிறுத்த முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப மனதிற்குள் காதல் பூத்துக் குலுங்கி விட்டது.

இதனைத் தொடர்ந்து இவர்களுடைய கல்யாண வேலைகள் பரபரப்பாக நடக்கப்போகிறது. இன்னொரு பக்கம் இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று வேல்விழி பல சதிகளை செய்து வருகிறார். இருந்தாலும் இவர்கள் ஒன்று சேர்ந்து வேல்விழிக்கு சரியான பாடத்தை கற்பிக்கப் போகிறார்கள். அடுத்ததாக இன்னொரு புத்தம்புது சீரியலாக வந்து மக்கள் மனதில் ஒய்யாரமாக இருப்பது மல்லி.

வெண்பாவிற்காக விஜய், மல்லியை தாயாக கூட்டிட்டு வந்து நடிக்க வைத்தார். ஆனால் இவர்கள் நடிக்கிறார்கள் என்று விஜய் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்ததால் நெருக்கடி கொடுத்து இவர்களுடைய கல்யாணத்தை நடத்துவதற்கு ஏற்பாடு பண்ணி விட்டார்கள். ஆரம்பத்தில் வெண்பாவிற்காக விஜய் மற்றும் மல்லி நடித்தாலும் தற்போது இருவருடைய மனதிலும் காதல் வந்துவிட்டது.

அதனால் யார் நினைத்தாலும் நம்முடைய கல்யாணத்தை தடுத்து நிறுத்த முடியாது என்பதற்கு ஏற்ப இருவரும் கல்யாணத்திற்கு சம்மதம் கொடுத்து விட்டார்கள். வழக்கம்போல் இவர்களுடைய கல்யாணத்தை நிறுத்துவதற்கு மல்லி குடும்பமும், விஜய்யின் முதல் மனைவியின் அப்பா மற்றும் தங்கை, அக்கா மகள் என அனைவரும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள். இவர்களை எல்லாம் தாண்டி எப்படி கல்யாணத்தை நடத்தப் போகிறார்கள் என்பது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த இரண்டு நாடகமே எதிர்நீச்சல் சீரியல் இல்லாத குறையை தீர்த்து விட்டது.

Trending News