Donald Trump and Elon Musk: அமெரிக்கா முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் சமீபத்தில் பெனிசுலியாவில் தேர்தலை முன்னிட்டு ஒரு மாநாட்டை வைத்திருந்தார். அப்பொழுது ட்ரம்பை நோக்கி வந்த துப்பாக்கிக் குண்டு அவருடைய காதில் காயத்தை ஏற்படுத்தி விட்டது.
இதனால் அங்கு இருந்தவர்கள் உஷாராகிய நிலையில், ட்ரம்ப் உடனே கீழே குனிந்து அவருடைய உயிரை பாதுகாத்துக் கொண்டார். உடனே பாதுகாப்பு படையினர் ட்ரம்பை பத்திரமாக மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
வெற்றி கிடைக்கும் நம்பிக்கையில் ட்ரம்ப கொடுத்த வாக்குறுதி
தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ட்ரம்ப், நவம்பர் மாதத்தில் நடக்க இருக்கும் தேர்தலை நோக்கி மும்மரமான வேலைகளை பார்த்து வருகிறார். அத்துடன் இவருடன் போட்டி போடுவதற்கு ஜோ பைடன் தயாராகி இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் ட்ரம்ப்விடம் அமெரிக்கா பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வி என்னவென்றால் நீங்கள் வெற்றி பெற்றால் எலான் மாஸ்க்கு ஆட்சியில் பதவி வழங்குவீர்களா? என கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக ட்ரம்ப் கூறியது, நிச்சியம் நான் மறுபடியும் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு திரும்புவேன். என்னுடைய நிர்வாகத்தில் எலன் மாஸ்க் பங்கேற்க தயாராக இருந்தால் அமைச்சரவை உறுப்பினர் அல்லது ஆலோசகர் பதவியை வழங்குவேன் என்று கூறியிருக்கிறார்.
அத்துடன் ஏற்கனவே எலக்ட்ரானிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 7500 அமெரிக்க டாலர் வரி சலுகையை நீக்குவது குறித்தும் சிந்திப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக மாஸ்க் அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதாவது ட்ரிம்பின் அழைப்பை ஏற்று நாட்டுக்கு சேவையாற்ற தயாராக உள்ளதாக பதிவிட்டிருக்கிறார்.
இவருடைய நம்பிக்கையை பார்க்கும் பொழுது நிச்சயம் அமெரிக்காவின் அதிபர் பதவியை மீண்டும் ட்ரம்ப் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. வருகிற நவம்பர் மாதத்தில் 5ம் தேதி நடக்க இருக்கும் தேர்தலைப் பொருத்தே எல்லாம் நிர்ணயிக்கப்படும்.
- டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய அந்த நபர்
- முன்னாள் அதிபர் ட்ரம்ப்-க்கு எதிராக தொடரப்பட்ட 36 வழக்குகள்
- சீரியல் பார்த்தா தூக்கு, 30 மாணவர்களுக்கு தண்டனை