வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

நீலி கண்ணீர் வடிக்கும் மீனாவை அசிங்கப்படுத்திய ரோகினி.. மருமகளுக்காக விஜயா செய்யும் சதியில் சிக்கிய முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பொய்யும் பித்தலாட்டமும் பண்ணி விஜயா வீட்டின் மருமகளாக வந்து ஆட்டம் போடும் ரோகிணி பற்றிய விஷயங்கள் எதுவும் வெளிவராமல் ஒவ்வொரு முறையும் எஸ்கேப் ஆகிக்கொண்டே வருகிறார். அந்த வகையில் தற்போது மீனாவுக்கு கிடைத்த ஒரு விஷயத்தை வைத்து ரோகிணி கொஞ்சமாவது மாட்டுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மீனா அதை சரியாக விசாரித்து ரோகிணிக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்து கையும் களவுமாக குடும்பத்தில் முன் நிறுத்தினால் ரோகிணி யாரிடமும் இருந்து எஸ்கேப் ஆகாதபடி தரமான சம்பவத்தை உண்டாக்கி இருக்கும். அதை விட்டுட்டு தெரிந்தவுடன் சுருதியிடம் சொல்லி அவர் மூலம் ஒவ்வொருவருக்காக தெரிந்து கடைசியில் விஜயாவிற்கு இந்த விஷயம் தெரிந்து விட்டது.

ரோகினி நடத்தும் டிராமாவில் நம்பி மோசம் போன விஜயா

உடனே விஜயா, ரோகினியை கூப்பிட்டு கேட்டதும் அனைவரிடமும் இருந்து தப்பிப்பதற்காக மிகப்பெரிய டிராமாவை போட்டுவிட்டு செண்டிமெண்டாக அனைவரையும் லாக் பண்ணி விட்டார். அதாவது என்னுடைய அப்பா ஜெயிலில் மாட்டிக் கொண்ட பொழுது தான் நான் கருவை சுமந்தேன். ஆனால் அந்த நேரத்தில் என் அப்பாவை நினைத்து நினைத்து இரவும் பகலும் அழுது கொண்டு மன அழுத்தத்தில் இருந்ததால் அந்த கரு கலைந்து போய்விட்டது.

இதை அனைவரிடமும் சொல்லி வேதனைப்படுத்த விரும்பவில்லை. அத்துடன் மனோஜ்க்கு தெரிந்தால் தாங்க மாட்டான் என்பதற்காக தான் யாரிடமும் சொல்லாமல் நானே எல்லா கஷ்டத்தையும் அனுபவித்து அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தேன். இப்பொழுது மறுபடியும் இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்த நிலையில் நான் ரொம்பவே மனவேதனைக்கு ஆளாய் நிற்கிறேன் என்று விஜயாவிடம் கண்ணீர் கம்பளமுமாய் ஒரு டிராமாவை போட்டு விட்டார்.

ரோகினின் கண்ணீரை பார்த்ததும் விஜயா மற்றும் மனோஜ் பதறிப்போயி ரோகினிக்கு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தி வைத்தார்கள். அதோடு மட்டுமில்லாமல் இந்த மீனாவுக்கு இதே தான் வேலை மற்றவங்க விஷயத்தில் மூக்கு நுழைப்பது. எந்த ஒரு விஷயத்தையும் அரைகுறையாக கேட்டு முந்திரிக்கொட்டை மாதிரி முந்தி எல்லாருடைய நிம்மதியை கெடுப்பது தான் வேலை என்று விஜயா வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்து விட்டார்.

அத்துடன் ரோகிணியும், எங்க விஷயத்துல நீங்க ஏன் தலையிடுறீங்க, எங்க பெட்ரூமில் என்ன நடக்கும் என்று எட்டிப் பார்க்கிறதா உங்களோட வேலையே என அசிங்கப்படுத்தும் அளவிற்கு அனைவரது முன்னாடியும் மீனாவை திட்டிவிட்டார். மீனாவிற்கு சப்போர்ட்டாக யாரும் பேச முடியாத நிலையில் மீனா அமைதியாக நின்னு அழுது கொண்டே முத்துவிடம் புலம்புகிறார்.

முத்து சமாதானப்படுத்தும் விதமாக மீனாவிடம் இனி ரோகிணி எக்கடும் எப்படியும் கெட்டுப் போகிறார். அவள் விஷயத்தில் இனி நாம் தலையிட வேண்டாம். இந்த பார்லர் அம்மாவும், ஓடிப்போன மனோஜும் ரெண்டு பேருமே தில்லாலங்கடி வேலைகள் தான் பார்க்கிறார்கள். அந்த வகையில் இன்னும் என்னெல்லாம் ரகசியத்தை வைத்திருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

அதனால் அதைப் பற்றி யோசித்து நாம் நம்முடைய சந்தோஷத்தை கெடுக்க வேண்டாம். அவர்கள் எப்படியும் போகிறார்கள் என்று மீனாவிடம் சொல்லி முத்து சமாதானப்படுத்துகிறார். இதனை கேட்ட ரோகிணி, விஜயாவிடம் முத்து மற்றும் மீனாவை பற்றி தர குறைவாக பேசி அவர்கள் இருந்தால் நாங்கள் சந்தோஷமாக இருக்க முடியாது. அதனால் நான் மனோஜை கூட்டிட்டு தனிக்குடித்தனம் போகிறேன் என்று விஜயாவை பிளாக்மெயில் பண்ண ஆரம்பித்து விட்டார்.

ஆனால் விஜயா, அவங்களுக்காக நீங்க ஏன் வெளியே போகணும். நீங்கள் இரண்டு பேரும் ஒற்றுமையாக இந்த வீட்டில் சந்தோஷமாக இருந்தால் தான் எனக்கு நிம்மதி. அவர்களை என்ன பண்ணனும் எப்படி இந்த வீட்டை விட்டு வெளியே போக வைக்கணும் என்று எனக்கு தெரியும். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் நீ எதை பற்றியும் கவலைப்படாமல் மனோஜ் உடன் சந்தோஷமாக இரு என்று ரோகினிக்கு சப்போர்ட்டாக பேசுகிறார்.

அந்த வகையில் விஜயா அதிரடியாக ஏதாவது ஒரு சூழ்ச்சி பண்ணி அதில் முத்துவை சிக்க வைத்து மீனா மற்றும் முத்துவை வீட்டில் இருந்து வெளியே அனுப்புவதற்கு பிளான் பண்ணுவதற்கு தயாராகி விட்டார். ஆனால் விஜயா பிளான் பண்ணுகிறாரோ இல்லையோ, இந்த முத்துவும் மீனாவும் தனியாக போனால் தான் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் நல்ல வாழ்க்கையை வாழ்ந்து காட்ட முடியும்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -

Trending News