Goat: வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் கோட் இன்னும் சில தினங்களில் திரைக்கு வருகிறது. நேற்று இதன் நான்காவது பாடல் வெளியான நிலையில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு அமோகமாக தொடங்கி இருக்கிறது.
அதேபோல் பட குழுவினரும் பிரமோஷன் வேலைகளை பரபரப்பாக பார்த்து வருகின்றனர். இதில் இயக்குனர் பல சோசியல் மீடியா சேனல்களுக்கும் பேட்டி கொடுத்து படம் பற்றிய சுவாரசியமான செய்திகளை சொல்லி வருகிறார்.
அதில் அவர் கூறிய ஒரு விஷயம் பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது. அதாவது இந்த கோட் படத்தின் மையக்கரு கொரோனா காலகட்டத்திலேயே எனக்கு தோன்றியது. அந்த சின்ன விஷயத்தை வைத்துக்கொண்டு நான் கதையை உருவாக்க ஆரம்பித்தேன்.
அப்போது இந்த கதையில் இரண்டு வித்யாசமான நடிகர்கள் நடிக்க வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். அதாவது கொஞ்சம் வயதான கேரக்டரில் ரஜினியும் இளமையான கேரக்டரில் தனுஷும் நடித்தால் நன்றாக இருக்கும் என எனக்கு தோன்றியது.
ரஜினி தனுசுக்கு உருவான கதை
அதன் பிறகு சில டெக்னாலஜி பற்றி தெரிய வந்து அதற்கேற்ற மாதிரி கதையை உருவாக்கினேன். அப்போது விஜய் சார் நடிக்கலாமே என தோன்றியது. அந்த சமயத்தில் தான் அவருடைய மேனேஜர் ஜெகதீஷை எதார்த்தமாக சந்தித்தபோது இதைப்பற்றி கூறினேன்.
அதன் பிறகு விஜய்யுடன் சந்திப்பு, கதை டிஸ்கஷன் என ஒவ்வொன்றாக நடந்தது. இடையில் என்னுடைய தெலுங்கு பட வேலைகளும் முடிந்து மீண்டும் தளபதியை சந்தித்து கதையின் ஒன் லைனை கூறினேன்.
இப்படித் தான் கோட் படம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ரஜினி, தனுஷ் என ஆரம்பித்து கடைசியில் விஜய் கைக்கு மாறியதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். மேலும் ஷூட்டிங் ஆரம்பிக்கும் போது முழு கதையையும் விரிவாக நான் சொல்லவில்லை.
முதல் ஷெட்யூல் ஆரம்பித்த பிறகு தான் விஜய்யிடம் பக்காவாக கதையை சொன்னேன் என தெரிவித்துள்ளார். ஆனாலும் வெங்கட் பிரபுவை அடுத்த பட இயக்குனராக அவர் நியமித்தது முழு நம்பிக்கையால் மட்டுமே என இதன் மூலம் தெரிய வந்துள்ளது.