North Korea: இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் ஒவ்வொரு பக்கமும் மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்துகிறது. இதனால் வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 4100 வீடுகள், 7410 விவசாய நிலங்கள், அரசு கட்டிடங்கள், சாலைகள் மற்றும் ரயில்வே என அனைத்துமே வெள்ளத்தில் மூழ்கியது.
அது மட்டுமில்லாமல் இந்த பாதிப்புகளால் கிட்டத்தட்ட 1000 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வடமேற்கு பகுதியில் உலா சின்உய்ஜூ, உய்ஜூ போன்ற நகரங்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது.
வடகொரிய நாட்டின் அதிபர் கிங் ஜோங் பாதிக்கப்பட்ட பகுதியே நேரில் சென்று பார்வையிட்ட போது அவ்விடங்களை மீண்டும் சரி செய்து கட்டிடங்களை கட்டி முடிப்பதற்கு பல மாதங்கள் ஆகும் என்று தெரிவித்திருக்கிறார்.
கடுமையான சட்டத்தை போட்ட வடகொரியா அதிபர்
ஆனாலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 1000பேர் உயிரிழந்த நிலையில் அதை தடுக்க தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு அதிபர் கிங் ஜோங் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இவர் உத்தரவின் படி அந்த 30 அதிகாரிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வெள்ள பாதிப்புகளை தடுக்க தவறிய அதிகாரிகளை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்ற அதிபர் உத்தரவிட்டிருந்தார்.
இதனால் இதற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் ஊழல், கடமை தவறிய அரசு அதிகாரிகள் யாரெல்லாம் என்று கண்டறியப்பட்டது. அப்பொழுது அதில் 30 அதிகாரிகள் சரிவர கடமைகளை செய்ய தவறியதால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டதற்கு உயிர் பலியாய் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.
அதனால் அதிபர் போட்ட உத்தரவை நிறைவேற்றும் விதமாக அந்த 30 அதிகாரிகளுக்கும் கடுமையான தண்டனையாக மரண தண்டனை கொடுத்திருப்பதாக தென் கொரியா ஊடகங்கள் தகவலை வெளியிட்டு இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் இதுபோன்ற கடுமையான சட்டம் ரொம்பவே அவசியமானது தான்.
ஆனால் மரண தண்டனை என்பது மிகவும் கொடுமையானதாகவும் பார்க்கப்படுகிறது. அத்துடன் இதுபோன்ற தவறுகள் இனி எந்த அதிகாரிகளும் செய்வதற்கு யோசிக்கக்கூட மாட்டார்கள். சட்டம் கடுமையானால் தான் குற்றம் ஏற்படுவதை தடுக்கலாம் என்று சொல்லும் விதிவிலக்கு ஏற்ப வடகொரியா அதிபர் செயல்பட்டு இருக்கிறார்.
- மீண்டும் அதிபர் ஆனா ட்ரம்ப் நிறைவேற்றும் முதல் வாக்குறுதி
- சீரியல் பார்த்தா தூக்கு, 30 மாணவர்களுக்கு தண்டனை
- டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய அந்த நபர்