Vijay: வெங்கட்பிரபு இயக்கத்தில் இன்று கோட் படம் வெளியாகி உள்ள நிலையில் பலரும் இந்த படத்திற்கான விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள். இந்த சூழலில் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலில் தன்னுடைய விமர்சனத்தை கொடுத்து உள்ளார்.
ஒரு என்டர்டைன்மென்ட் படமாக வெங்கட் பிரபு கோட் படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கேரக்டர்களிலும் விஜய் அசத்தியுள்ளதாக பயில்வான் கூறியிருக்கிறார். மற்ற படங்களில் எல்லாம் அவருக்கு அவ்வளவாக நடிப்பு இருக்காது.
ஆனால் கோட் படத்தில் உசுரை கொடுத்து விஜய் நடித்திருக்கிறார். அவர் சினிமாவுக்கு முழுக்க போட்டுவிட்டு அரசியலுக்கு சென்றால் ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்து விடும். சிவகார்த்திகேயன் ஒரே சீனில் வந்தாலும் பக்காவாக நடித்து விட்டு சென்றிருக்கிறார்.
கோட் படத்திற்கு பயில்வான் ரங்கநாதனின் விமர்சனம்
பெரிய வேலைக்கு தளபதி செல்கிறார், நான் இனி பார்த்துக்கொள்கிறேன் என்று சினிமாவில் இனி தளபதி நான் தான் என்று சிவகார்த்திகேயன் சொல்லி உள்ளார். திரிஷா தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியின் நிறமான சிவப்பு மற்றும் மஞ்சள் நிற உடையில் வந்த நடனம் ஆடுகிறார்.
மேலும் மீனாட்சி சவுத்ரிக்கு ஒரு பாடல் காட்சியில் மட்டும் தான் இடம் கொடுத்துள்ளார்கள். சினேகா தான் இந்த படத்தில் முக்கிய கதாநாயகியாக இருக்கிறார். இப்போதும் 25 வயது நடிகை போல தான் காட்சியளிக்கிறார். கோட் படத்தில் தனது கணவன் விஜய் மீது சந்தேகப்பட்டு பிரிந்து விடுகிறார்.
நிஜ வாழ்க்கையில் சங்கீதாவை பிரிந்து எப்படி விஜய் வாழ்கிறாரோ அதேபோல் கோட் படத்தில் வெங்கட் பிரபு காட்டி இருக்கிறார். சினேகா தனது கணவன் வேறு ஒரு பெண்ணுடன் பழகுகிறாரா என்று நினைத்த அவரை விட்டு விலகி இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
ரிலீசுக்கு முன்பே பட்டையை கிளப்பும் விஜய்யின் கோட் வசூல்