சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ரோகினியை தவிக்க விடும் முத்து மீனா.. மறுபடியும் மொட்டை கடுதாசியால் ஏமாறப்போகும் மனோஜ்

Sirakadikkum Asai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மற்றும் மீனா, ரோகிணியின் அம்மாவை பார்த்து கிரிசை தத்தெடுக்கலாமா என்று கேட்டு வந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரோகிணி இதை தடுக்கும் பொருட்டாக விஜயா மூலம் காய் நகர்த்த பிளான் பண்ணி விட்டார். அந்த வகையில் வீட்டிற்கு திரும்பி வந்த முத்து மற்றும் மீனா, அண்ணாமலை இடம் கிரிஷின் பாட்டியை பார்த்து தத்தெடுக்கும் விஷயத்தைப் பற்றி பேசியிருக்கிறோம்.

அவர்களும் கொஞ்சம் யோசிக்க நேரம் கேட்டிருக்கிறார்கள். அதனால் யோசித்து நல்ல முடிவை தான் சொல்வார்கள் என்று முத்து மற்றும் மீனா சொல்கிறார்கள். இதை மறைந்திருந்து ஒட்டு கேட்கும் ரோகிணி, இவங்க போற வேகத்தை பார்த்தால் தேவையில்லாமல் பிரச்சனையாகி விடுமோ என்ற பயம் வந்துவிட்டது. இதனால் விஜயாவிடம், முத்து மீனா அந்த சின்ன பையனை தத்தெடுப்பதை பற்றி மாமாவிடம் பேசி இருக்கிறார்கள்.

மனோஜ்க்கு தொடர்ந்து வரும் மொட்டைக் கடிதாசி

அதனால் அவர்கள் இருக்கும் வேகத்தை பார்த்தால் சீக்கிரத்தில் அவர்கள் சொன்ன மாதிரி அந்த பையனை தத்தெடுத்து கூட்டிட்டு வந்து விடுவார்கள் போல தெரிகிறது என்று சொல்கிறார். அதற்கு விஜயா, பெருசாக ரியாக்ஷன் கொடுக்காமல் இருந்த நிலையில் ரோகிணி தொடர்ந்து விஜயாவின் மூளையை சலவை செய்கிறார். பிறகு அந்த அனாதை பையனை அவர்கள் கூட்டிட்டு வந்தால் இதை வைத்தே பிரச்சனை பண்ணி அவர்களை வீட்டை விட்டு அனுப்பி விடுவேன் என்று விஜயா சொல்கிறார்.

விஜயா அனாதை பையன் என்று சொன்னதும் ரோகிணிக்கு கோபம் வந்துவிட்டது. உடனே அத்தை அப்படி எல்லாம் சொல்லாதீங்க என்று சொல்லி பேசி சமாளித்து விடுகிறார். அத்துடன் இனியும் இந்த அத்தை நம்பினால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று நாமலே ஒரு முடிவு பண்ணலாம் என ரோகிணி நினைத்து விட்டார். அந்த வகையில் க்ரிஷை யாருக்கும் தெரியாமல் சென்னையில் ஒரு வீட்டில் தங்க வைத்துவிடலாம்.

அதன் பக்கத்திலேயே ஒரு ஸ்கூல் சேர்த்து விடலாம் என்று தோழி வித்யாவை கூட்டிட்டு பள்ளிக்கு விசாரிக்க போய்விட்டார். இந்த தகவலை ரோகிணி, அம்மாவிடமும் சொல்லி அடுத்த வாரத்தில் நீங்கள் இருவரும் இங்கே வந்து இருக்கலாம் என்று கூறிவிட்டார். ஆனாலும் முத்து மற்றும் மீனா, க்ரிஷ் விஷயத்தில் இருக்கும் வேகத்தினால் ரோகிணி நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டு வருகிறார்.

அத்துடன் மனோஜ் என்ன பண்ணுகிறார் கடை எந்த அளவுக்கு போகிறது என்பதிலும் கவனம் செலுத்த முடியாமல் அலைகிறார். இந்த நேரத்தில் மனோஜ்க்கு மறுபடியும் ஒரு மொட்டை கடுதாசி வந்துவிட்டது. அதில் உங்களை கூடிய சீக்கிரத்தில் ஏமாற்றி ஒட்டுமொத்த கடையையும் புடுங்க போகிறார்கள். நீங்கள் பிஸ்னஸ் பண்ண முடியாத அளவிற்கு நடுத்தெருவில் வந்து நிற்கப் போகிறீர்கள் என்பது போல் போட்டிருக்கிறது.

இதை படித்ததும் வழக்கம்போல் மனோஜ் பதட்டத்துடன் யார் அனுப்பி இருக்கிறார்கள் என்று தேடி அழைக்கிறார். ஆனால் யார் என்று தெரியாத நிலையில் மிகவும் குழப்பத்துடன் இருக்கிறார். ஆக மொத்தத்தில் மனோஜை யாரோ ஒருவர் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அது ஜீவாவாக கூட இருக்கலாம். கூடிய விரைவில் மக்கு மனோஜை ஏமாற்றி ஷோரூம் அனைத்தையும் அபகரித்து ஏமாற்றப் போகிறார். இதனால் ஓவராக ஆட்டம் ஆடும் ரோகினியின் அட்டகாசமும் கொஞ்சம் அடங்க வாய்ப்பு இருக்கிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News