வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பிக்பாஸ் 8-க்கு வரப்போகும் பழைய போட்டியாளர்.. விஜய் சேதுபதியின் பார்முலா, கிராண்ட் ஓப்பனிங் எப்ப தெரியுமா.?

Biggboss 8: விஜய் டிவியில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்து விட்டது. தற்போது எட்டாவது சீசன் ஆரம்பிக்கும் நிலையில் கமல் அதிலிருந்து விலகி விட்டார். அவருக்கு பதில் தற்போது விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. அதை அடுத்து நிகழ்ச்சி எப்போது தொடங்கும்? ப்ரோமோ வீடியோ எப்போது வரும்? என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி பிக்பாஸ் சீசன் 8 அக்டோபர் 13ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது.

அதற்கான ப்ரோமோ வீடியோ அடுத்த வாரம் வெளிவர இருக்கிறது. அதில் என்றும் இல்லாத வகையில் புது விஷயமும் இருக்கிறது. அதாவது இந்த முறை விஜய் சேதுபதி நிகழ்ச்சியை எப்படி கொண்டு செல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஆடியன்ஸ் மத்தியில் இருக்கிறது.

கிராண்ட் ஓப்பனிங் எப்ப தெரியுமா.?

முந்தைய சீசனில் கமல் ஒரு சார்பாக நடந்து கொண்டது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அதை தாண்டி மக்கள் நாயகனான இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கும் பஞ்சாயத்தை எப்படி தீர்ப்பார்? போட்டியாளர்களை சரியாக வழிநடத்துவாரா? போன்ற பல கேள்விகளும் எதிர்பார்ப்பும் உள்ளது.

அதன்படி நிகழ்ச்சியின் தொடக்க நாளில் ஆடியன்ஸ் இது குறித்து அவரிடம் நேரடியாகவே கேள்வி கேட்கலாம். அவற்றிற்கு விஜய் சேதுபதி பதில் சொல்ல தயாராக இருக்கிறார். அதேபோல் ஆடியன்ஸ் நிகழ்ச்சி தொடர்பான தங்களுடைய கருத்துக்களையும் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என சில ஐடியாக்களையும் கூறலாம்.

மேலும் இந்த சீசன் 8ல் மூன்று பழைய போட்டியாளர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்பது சர்ப்ரைஸ் ஆக வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தவறு செய்யாமல் கடந்த சீசனில் வெளியேறிய பிரதீப் உள்ளே வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.

அதேபோல் மீண்டும் ஓவியாவை எதிர்பார்க்கலாம். இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் இந்த சீசனில் இருக்கிறது. அந்த வகையில் இதில் விஜய் சேதுபதியின் பார்முலா என்ன? அது எந்த அளவுக்கு ரசிகர்களை கவரும் என்பது நிகழ்ச்சி ஆரம்பித்து போக போக தெரியும்.

பிக்பாஸ் சீசன் 8ல் விஜய் சேதுபதியின் வியூகம்

- Advertisement -

Trending News