திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

சூப்பர் ஸ்டாருடன் மஞ்சு சேச்சி போட்ட ஆட்டம்.. தெறிக்க விட்டான் வந்தல்லே, வெளியானது வேட்டையான் ஃபர்ஸ்ட் சிங்கிள்

Vettaiyan First Single: ஜெய் பீம் ஞானவேல் இயக்கத்தில் லைக்கா தயாரித்துள்ள வேட்டையன் வரும் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாஸில் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான மனசிலாயோ இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பே இந்த பாடலை லெஜன்ட் பாடகர் ஒருவர் பாடியுள்ளார் என தயாரிப்பு தரப்பு ட்விஸ்ட் வைத்திருந்தது.

அதன்படி மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ மூலம் இதில் பயன்படுத்தியுள்ளனர். அதன் முன்னோட்ட வீடியோ நேற்று வெளியாகி வைரலானது. அதை தொடர்ந்து ரஜினி மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் இருக்கும் போஸ்டரும் வெளியானது.

மஞ்சு வாரியர் போட்ட கலக்கல் ஆட்டம்

ஏற்கனவே மஞ்சு இதில் நான் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கிறேன் என கூறியிருந்தார். அதன்படி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. எதிர்பார்த்ததற்கும் மேலாகவே பாடல் அடிபொலியாக இருக்கிறது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடலில் சூப்பர் ஸ்டார் மஞ்சு சேச்சியுடன் இணைந்து கலக்கல் ஆட்டம் போட்டு உள்ளார். சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அனிருத்தும் சேர்ந்து ஆடி இருப்பது வேற லெவலில் இருக்கிறது.

அதிலும் மஞ்சு வாரியர் கூலிங் கிளாஸ், புடவை என இளம் நடிகைகளை ஓரம் கட்டி செம குத்து குத்தி இருக்கிறார். இந்த பாடல் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

சோசியல் மீடியாவை கலக்கும் வேட்டையன் பாடல்

Trending News