Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தாத்தாவின் இறப்பில் கோபிக்கு கிடைத்த தண்டனையால் கொஞ்சமாவது திருந்தி அந்த குடும்பத்திற்கும் பாக்யாவிற்கும் பக்கபலமாக கோபி இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்மாறாக கோபி ஒட்டுமொத்த கோபத்தையும் வைத்து பாக்யாவை பழிவாங்கும் விதமாக தொடர்ந்து இன்னும் இந்த சீரியல் நீடிப்பதற்கு பிளான் பண்ணிவிட்டது.
அந்த வகையில் கோபி, அப்பாக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகள் செய்யாமல் போனதுக்கும், மூன்றாவது நபர் போல் அந்த வீட்டில் இருந்த நிலைமைக்கு காரணம் பாக்கிய தான் என்ற எண்ணத்தில் பாக்கியவை பழிவாங்க கோபி வெறிகொண்டு அலைகிறார். அந்த வகையில் தாத்தாவின் அஸ்தி எல்லாம் கரைத்து முடித்த பிறகு கோபி மன வருத்தத்துடன் இருக்கும் பொழுது ராதிகா ஆறுதலாக பேசுகிறார்.
ஒட்டுமொத்த கோபத்தையும் பாக்கியா மீது காட்டும் கோபி
ஆனால் கோபி முடிந்ததெல்லாம் பற்றி பேசி இனி எந்த பிரயோஜனமும் இல்லை. நான் பட்ட அவமானத்திற்கும் வேதனைக்கும் கண்டிப்பாக பதிலடி கொடுக்க வேண்டும். நான் இப்பொழுது எந்த நிலைமையில் இருக்கிறேனோ, அதே நிலைமையில் பாக்யாவும் யாரும் இல்லாமல் நிற்கதியாக நிற்க வேண்டும். அதற்கு பிள்ளைகள் மற்றும் குடும்பத்தை பாக்கிவிடமிருந்து பிரித்து தனி மரமாக நான் தவிக்க விடனும் என்று பாக்கியவை பழி தீர்க்க கோபி முடிவு பண்ணுகிறார்.
ஆனால் இதெல்லாம் வேண்டாம் என்று எந்தவித மறுப்பும் சொல்லாமல் ராதிகா, உங்க நிலைமை எனக்குப் புரிகிறது. இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு சப்போர்ட்டாக நிற்பேன். ஆனால் இதையே நினைத்து உங்க உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று அட்வைஸ் பண்ணுகிறார். இருந்தாலும் எதையும் காது கொடுத்து கேட்காத கோபி இனி பாக்யாவுக்கு கொடுக்கப் போகும் டார்ச்சரால் அல்லல்படப் போகிறார்.
இதுவரை பாக்யாவிற்கு சப்போர்ட்டாக இருந்த தாத்தாவும் இல்லை என்பதால் பாக்யாவின் நிலைமை என்னவாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. ஏற்கனவே எழில் மற்றும் அமிர்தா எடுத்த முடிவின்படி வெளியே போய் அவர்களுடைய வாழ்க்கையை வாழும் விதமாக சாதித்து காட்டப் போகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் ஈஸ்வரி மற்றும் செழியன் உடன் இருக்கும் பாக்யாவை தொந்தரவு செய்து குடச்சல் கொடுக்கப் போகிறார். கடைசியில் தாத்தா இல்லாமல் அந்த குடும்பமே பரிதவித்து ஒவ்வொரு நாளும் தண்டனையை அனுபவிக்க போகிறார்கள். ஆனால் ஈஸ்வரி எடுத்த முடிவால் பாக்யா பலியாடாக சிக்கப் போகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- அப்பா மகன் உறவே இல்லாமல் கோபியை விட்டுப் போன பந்தம்.
- பாக்கியலட்சுமிக்கு முன் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கியமான சீரியல்
- ஈஸ்வரி கொடுத்த டார்ச்சரால் பிக் பாஸ் போகும் மருமகள்