வேட்டையன் ஆடியோ லான்ச் நேற்று நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய் போல் ரஜினி ஏதாவது குட்டிக்கதை சொல்லுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த விழாவில் ரஜினி ஒரு மணி நேரம் பேசினார். அவர் பேச்சு மிகவும் சுவாரசியமாய் இருந்தது.
டி ஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன் துஷாரா விஜயன், ராணா, என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர் ஜெயிலருக்கு பின் ரஜினியை வைத்து லைக்கா தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
அனிருத்தின் இசை இந்தப் படத்தை தூண் போல் தாங்கியுள்ளது என்றும், இளையராஜா மற்றும் ஏ ஆர் ரகுமான் ஒரு சேர இருப்பது போல் உணர்கிறேன் என ரஜினி, அனிருத்தை தூக்கி வைத்து பேசினார். அனிருத்தும் தன் மாமா ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.
மாமா ரஜினி இருக்கிற தைரியத்துல குட்டி தம்பி பேசிய பேச்சு
இது ஒரு புறம் இருக்க மேடையில் பேச வந்த அனிருத், இதுவரை தான் 34 படத்திற்கு இசையமைத்துள்ளதாகவும். ஆனால் இந்த தருணம் தன் வாழ்நாளில் மிகவும் மறக்க முடியாத ஒரு நேரம் என குறிப்பிட்டிருந்தார்.
எல்லாவற்றிற்கும் மேலாக அனிருத் தான் இசையமைத்த 34 படங்களில் நான்கு படங்கள் ரஜினியுடன் பண்ணியதாகவும். அதைத்தான் மக்கள் கூச்சலிட்டு, தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் என்றும் கூறினார்
அனிருத், விஜய் படங்களுக்கும் இதேபோல் மேடை கச்சேரி செய்யும் பொழுது கூட மக்கள் கொண்டாடினார்கள். ஆனால் இந்த மேடையில் விஜய்யை மட்டம் தட்டி, ரஜினியை மட்டும் தூக்கி வைத்து பேசினார்.
- நான் தான் நம்பர் ஒன் என நிரூபித்த அனிருத்
- அனிருத் மீது வெறுப்பை கக்கும் விக்னேஷ்
- சந்தோசத்தில் திக்குமுக்காடி வரும் அனிருத்