புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

5 ஆண்டுகளுக்கு முன் 3% ஓட்டுகள்.. இன்னைக்கு இலங்கையை ஆட்டி படைக்க போகும் அடுத்த தலைவர், யார் இவர்?

இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதிக வாக்குகளுடன் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றுள்ளார். இத்தேர்தலைப் பற்றியும், புதிய அதிபர் கடந்து வந்த அரசியல் பயணத்தையும் பற்றி பார்க்கலாம்.

நமது அண்டை நாடான இலங்கையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜபக்சே ஆட்சியின்போது, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, விலைவாசிகள் உயர்ந்தன. இதனால் மக்கள் வீதிக்கு வந்து போராடி, அவரது அரசுக்கு எதிராகக் கிளர்சிகள் செய்தனர். இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகின் முக்கியச் சுற்றுலாத்தள நாடான இலங்கை அமைதிக்கு திரும்பிய நிலையில், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. திகழ்கிறது. இந்த நிலையில், இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், ரணில் விக்கிரமசிங்க அஜித் பிரேமதாசா, அனுர குமார திசநாயக உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.இத்தேர்தல் உலக நாடுகளாலும் உற்றுக் கவனிக்கப்பட்டது.

இந்த நிலையில்,இலங்க்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்து, ஓட்டு எண்ணிக்கை இன்று நடந்தது….வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதல் தேசிய மக்கள் சக்தி என்ற கட்சியைச் சேர்ந்த அனுர குமார திசநாயக முன்னிலை வகித்த நிலையில், அவருக்கு மொத்தம் 42.31 சதவீத வாக்குகள் கிடைத்தன.

சஜித் பிரேமதாசவுக்கு 32.7 6 சதவீத வாக்குகள் கிடைத்தன. முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 17.27 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இது அக்கட்சிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இலங்கையில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட எந்த வேட்பாளர்களுக்கும் பெரும்பான்மை இல்லாததால், இதுவரை இல்லாத வகையில் அங்கு 2 வது முறையாக வாக்குகள் எண்ணப்பட்டன.இந்த 2வது வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, அநுர குமார திச நாயக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இறுதிக்கட்ட வாக்குகள் நிலவரப்படி, அவர் 57,40,179 வாக்குகளும், 2 வது இடத்தைப் பிடித்துள்ள சஜித் பிரேமதாச 4 5,30, 902 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு அந்த நாட்டில் பொருளாதார நெருக்கடிக்குப் பின் இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதன்படி, இலங்கை நாட்டின் 9வது அதிபராக அநுர குமார திசநாயக நாளை பதவியேற்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.இது அக்கட்சியினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அவர்கள் கொண்டாடி வருகின்றனர். ”நாம் கண்ட நூற்றாண்டு கனவு நனவாகியுள்ளது” என அநுர குமார திசநாயக பேசியுள்ளார்.

மாற்றம் வேண்டி, புதியவருக்கு வாய்ப்புக் கொடுத்துள்ள மக்களின் தீர்ப்பு இதுவென்றாலும், அம்மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகளையும் தீர்க்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இப்புதிய அரசு என்னென்ன முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன. அதன் அண்டை நாடுகளும் புதிய அரசின் நடவடிக்கைகளை உற்று நோக்கிய வண்ணம் உள்ளதாக தகவல் வெளியாகிறது.

அதேசமயம்,  தமிழக  மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அடிக்கடி, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு,வரும் நிலையில், இவரது தலைமையிலான புதிய அரசு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் நடவடிக்கைகளை நிறுத்துமா என்பது தமிழகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

யார் இந்த அநுர குமார திசநாயக?

அமெரிக்காவைப் போல இலங்கையிலும் 2 முறை மட்டுமே ஒருவர் அதிபர் பதவி வகிக்க முடியும் என்பது இலங்கை அரசியலமைப்பில் சட்டவிதியாகும்.தேசிய மக்கள் சக்தி முன்னணி கட்சி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயக, இத்தேர்தலில் போட்டியிட்ட 39 பேரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

இவர்,’ இலங்கையின் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தியர்புத்தேகம என்ற ஊரில் 1968 ஆம் ஆண்டு பிறந்தார். பேராதனை யுனிவர்ச்சிடில் பயின்ற இவர், 1988 ஆம் ஆண்டு ஜேவிபி என்ற கட்சியில் சேர்ந்தார்.  பின்னர்,2000 ஆம் ஆண்டு  மக்கள் பிரதி நிதியாக நாடாளுமன்ற உறுப்பினாரார். 2004 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜபக்சே தலைமையிலான கூட்டணி ஆட்சியின்போது,  விவசாயத்துறை அமைச்சராக இருந்தார். இந்த நிலையில்  ஆண்டுகளுக்கு முன் போட்டியிட்டு வெறும் 3 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்ற இவர், இம்முறை தேசிய மக்கள் சக்தி முன்னணி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு 42.31  சதவீதம் வாக்குகள் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது’ குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News