சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ஆஸ்கர் விருதை தவறவிட்ட மகாராஜா, தங்கலான்.. ரேஸுக்கு செல்லும் அந்தப் படம்

Oscar Award : சினிமாவை பொருத்தவரையில் ஒரு படத்துக்கு என்னதான் பாராட்டுக்கள் கிடைத்தாலும் விருது என்பது தான் அதற்கான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சினிமாவில் உள்ள கலைஞர்கள் பெரிதும் பார்க்கப்படும் விருதுதான் ஆஸ்கர். இது பலருக்கு எட்டாக்கனியாக இருக்கிறது.

ஆஸ்கர் நாயகனாக வலம் வரும் ஏஆர் ரகுமான் இந்த விருதை பெற்றிருக்கிறார். மேலும் 2025 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு சில படங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே தமிழில் கமல் நடிப்பில் வெளியான இந்தியன், குருதிப்புனல், ஹேராம், பிரசாந்தின் ஜீன்ஸ், வெற்றிமாறனின் விசாரணை படங்கள் ஆஸ்கர் விருதை பெற்றிருந்தது.

அதேபோல் இந்த ஆண்டும் 97வது ஆஸ்கர் விருது விழாவுக்கு சில படங்கள் பரிந்துரை செய்யப்பட்டது. அதுவும் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்கள் தேர்வாகி இருந்தது. அதில் தமிழில் கிட்டத்தட்ட ஆறு படங்கள் தேர்வானது.

2025 இல் ஆஸ்கருக்கு செல்லும் படம்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா, விக்ரமின் தங்கலான், மாரி செல்வராஜின் வாழை, சூரியின் கொட்டுக்காளி, லாரன்ஸின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜமா ஆகிய படங்கள் தமிழில் பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல் மலையாள மொழியில் பிரித்விராஜின் ஆடு ஜீவிதம் உட்பட நான்கு படங்கள் தேர்வாகி இருந்தது.

தெலுங்கில் பிரபாஸின் கல்கி உட்பட மூன்று படங்களும் இந்தியில் ஆர்ட்டிகள் 370, லாபடா லேடிஸ் ஆகியவை ஆஸ்கர் விருது விழாவுக்கான படங்களில் பரிந்துரையில் இருந்தது. ஆனால் மற்ற மொழி படங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு அயல்நாட்டு படத்திற்கான தேர்வில் லாபடா லேடிஸ் படம் ரேசில் கலந்துள்ளது.

இந்த படத்தை கிரண் ராவ் இயக்கியிருக்கிறார். மேலும் இதில் தமிழ் படங்களுக்கு எந்த ஆஸ்கரும் கிடைக்காதது சினிமா ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்கர் 2025 விருது வழங்கும் விழா மார்ச் இரண்டாம் தேதி பிரம்மாண்டமாக டால்பி திரையரங்கில் நடக்கவுள்ளது.

ஆஸ்கரை தவறவிட்ட தங்கலான், மகாராஜா

Trending News