சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

மரண அடிக்கு பின் தேறி வரும் சங்கர்.. வேள்பாரி சங்கடங்களை மறந்து குஷி மூடில் இயக்குனர்

இந்தியன் 2 படத்தால் கடந்த இரண்டு மாதங்களாக மணசங்கடத்தில் இருந்து வந்தார் சங்கர். அந்த படம் சங்கர் கேரியரில் ஒரு பெரிய இடியை இறக்கியது. இப்படி எல்லாம் கூட சங்கர் எடுப்பாரா, இது சங்கர் படமே இல்லை என்றெல்லாம் படத்திற்கு நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது.

இரண்டு, மூன்று வருடங்களாக சங்கர் தனது கனவு படமான வேள்பாரி நாவலை தழுவிய கதையை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார்.அதற்கானஆர்டிஸ்ட் தேடுதல் வேலையில் இறங்கி இருந்தார்.

சு வெங்கடேசன் எழுதிய நவயுக நாயகன் வேள்பாரி நாவலின் உரிமை முழுவதும் சங்கரிடம் இருக்கிறது. ஆனால் அதை முறைகேடாக பல படங்களில் பயன்படுத்துகிறார்கள் என சங்கர் குற்றம் சாட்டி வருகிறார். ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த தேவார படத்தில் அந்த நாவலில் உள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளது என சங்கர் கவலை தெரிவித்துள்ளார்.

வேள்பாரி சங்கடங்களை மறந்து குஷி மூடில் இயக்குனர்

இது ஒரு புறம் இருக்க சங்கர் அடுத்து இயக்கி வரும் படம் கேம் சேஞ்சர். இப்பொழுது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டனர். டிசம்பர் 20 இது ரிலீஸ் ஆக உள்ளது. அடுத்தடுத்து இந்த படத்திற்கான அப்டேட்டுகளும் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

அதுமட்டுமின்றி செப்டம்பர் 30ஆம் தேதி இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் வெளிவர இருக்கிறது. ஆயுத பூஜை தினத்தன்று இந்த படத்தின் டிரைலரையும், பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதனால் வேள்பாரி கவலையிலிருந்து மீண்டு வந்த சங்கர் செம குஷி மூட்டில் இருக்கிறார்.

Trending News