நம்ப வச்சு காலை வாரிய தனுஷ்.. இட்லி கடையில் போனி பண்ணாமல் ஓடிய வளரும் ஹீரோ

தனுஷின் ஐம்பதாவது படமான ராயன் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தை தனுசே இயக்கி நடித்திருந்தார். ராயன் படத்தில் தனுஷ் கதாபாத்திரம் போலவே, நடித்த எல்லா கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இவரின் தம்பி கதாபாத்திரத்தில் காளிதாஸ் ஜெயராமும், சந்திப் கிஷானும் நன்றாக ஸ்கோர் பண்ணினார்கள்.

அந்த படத்துக்கு பின் தனுஷ் தனது அடுத்த படமாக “இட்லி கடை” படத்தை இயக்கி அவரே நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங் முழுவதும் தேனியில் நடைபெற்று வருகிறது. மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட யாரடி நீ மோகினி மற்றும், திருச்சிற்றம்பலம் ஆகிய இரண்டு படம் போலவே இது ஒரு பீல் குட் மூவியாக இருக்கும் என தனுஷ் கூறியுள்ளார்

இட்லி கடை படத்தின் வில்லனாக அருண் விஜய் நடித்த வருகிறார். இந்த படத்தில் ஏற்கனவே வளரும் ஹீரோ அசோக் செல்வனுக்கு முக்கியமான ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. தனுஷ் படம் என்பதால் கதையை கேட்காமல் கால் சீட் கொடுத்து, ஒப்புக்கொண்டார் அசோக் செல்வன்.

இட்லி கடையில் போனி பண்ணாமல் ஓடிய வளரும் ஹீரோ

தற்போது இந்த படத்தின் முழு கதையை கேட்ட பிறகு தான் அசோக் செல்வனுக்கு இந்த படத்தில் ஹோப் இல்லை என்றும், இது முழுக்க முழுக்க தனுசுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் படமாக தெரிந்ததால், இந்த படத்தில் இருந்து இப்பொழுது விலகி விட்டார்.

அசோக் செல்வனுக்காக தனுஷ் கதையை மாற்றி அமைக்க போகிறாரா இல்லை வேறு ஒரு நடிகரை தேர்ந்தெடுக்க போகிறாரா என்பது தெரியவில்லை. போர் தொழில், சபாநாயகன், ப்ளூ ஸ்டார் என அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் அசோக் செல்வன். வளரும் போதே இப்படி முக்கியத்துவம் இல்லாத ஒரு படம் வேண்டாம் என முடிவு எடுத்து விட்டார்.

- Advertisement -spot_img

Trending News